தி.மு.க.,வுடன் இருந்தால் தான் சட்டசபைக்கு காங்., வர முடியும்: அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை
புதுக்கோட்டை: “தி.மு.க., கூட்டணியில் இருந்தால் தான், காங்கிரஸ் கட்சியினரால் சட்டசபைக்குள் நுழைய முடியும் என்பது அக்கட்சியின் தலைமைக்கு தெரியும்,” என, கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., தலைவர், கூட்டணி பேச்சில் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார். நாங்கள் யாரையும் உதாசீனப்படுத்த மாட்டோம். காங்கிரஸ் கட்சி, த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்துவதாக கூறப்படுவது அப்பட்டமான பொய்.
தி.மு.க., கூட்டணியில் இருந்தால் தான், அரசியல் அந்தஸ்து கிடைக்கும், சட்டசபைக்குள் நுழைய முடியும் என்று காங்கிரஸ் தலைமைக்கு நன்றாகத் தெரியும். அ.தி.மு.க.,வை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான், நாங்கள் உழைக்கிறோம். தமிழகத்தில் ஆட்சிக்கு வரலாம் என்று மோடி பகல் கனவு காணலாம்; அது நடக்காது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிமன்றம் என் மீது எவ்விதமான குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டியது, ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை.
இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பே நீதிமன்றம் தான். தேவைப்பட்டால் மேல்முறையீடுக்காக உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம்.
உச்ச நீதிமன்றம் சொல்வதே இறுதி முடிவு. இந்த தேர்தலில் எந்த சவாலும் எங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இப்படி சொல்வது அகம்பாவம் இல்லை. எது வந்தாலும் சமாளிக்க தயாராக உள்ள இயக்கம் தான் தி.மு.க., இவ்வாறு ரகுபதி கூறினார்.
Advertisement

திமுகவின் கொத்தடிமை சிதம்பரம் இவனெல்லாம் ஒரு தேசியவாதியா ?