Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 ராஜ்யசபா எம்.பி., பதவிக்காக முட்டிமோதும் காங்., கோஷ்டிகள்

 ராஜ்யசபா எம்.பி., பதவிக்காக முட்டிமோதும் காங்., கோஷ்டிகள்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- நமது நிருபர் -
ராஜ்யசபா எம்.பி., 'சீட்' பெற, தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள், டில்லியில் முகாமிட்டுள்ளனர்.

ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய, நாளை கடைசி நாள். தமிழகத்தில் காலியாகும் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளில், தி.மு.க.,விற்கு நான்கு கிடைக்கும். கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தால், அக்கட்சிக்கு ஒன்று, தே.மு.தி.க.,வுக்கு ஒன்று என கொடுத்தது போக, மீதமுள்ள இரண்டை தங்கள் கட்சியினருக்கு தர தி.மு.க., திட்டமிட்டு உள்ளது.

கூட்டணியில் நீடித்தால், தி.மு.க., எப்படியும் ஒரு எம்.பி., சீட் தரும் என்பதால், அதை பெற, தமிழக காங்., கோஷ்டித் தலைவர்கள் முட்டி மோதுகின்றனர். டில்லியில் முகாமிட்டு, காய் நகர்த்தி வருகின்றனர்.
இது குறித்து, அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தங்கபாலு, திருநாவுக்கரசர், செல்லக்குமார், அழகிரி, சொர்ணா சேதுராமன், ராம சுகந்தன், ராஜேந்திரன் போன்றோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே, அவர்கள் அனைவரும், தங்களுக்கு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என, டில்லி மேலிட தலைவர்களை சந்தித்து காய் நகர்த்தி வருகின்றனர். அதேபோல், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மாநில நிர்வாகிகளும் ராஜ்யசபா எம்.பி., ஆக முயற்சித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement