Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 அ.தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும்: டில்லியில் பழனிசாமி பேட்டி

 அ.தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும்: டில்லியில் பழனிசாமி பேட்டி

புதுடில்லி: “தி.மு.க., கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
டில்லியில் நேற்று முன்தினம் இரவு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிய பழனிசாமி, நேற்று காலை சென்னை திரும்பினார். முன்னதாக, டில்லியில் அவர் அளித்த பேட்டி:

அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து, தமிழக தேர்தல் நிலவரம் பற்றி பேசினோம். தேர்தலில் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்பதை பற்றி ஆலோசித்தோம்.

கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். மேலும், சில கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது.

சசிகலா கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ப்பது குறித்து, அமித் ஷாவுடன் எதுவும் பேசவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை மிகச்சிறப்பாக, எழுச்சியாக கூட்டணி அமைந்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்துவோம். அ.தி.மு.க., கூட்டணி சுமுகமாக இருக்கிறது. எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு குழப்பம் இருப்பதை, ஊடக செய்தியை வைத்து கணிக்க முடிகிறது. அந்த கூட்டணியில்தான் பிரச்னை இருக்கிறது.

அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் ஒன்றாக இருந்து, மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. வரும் தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்; அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு கூறினார்.

Advertisement

மார் 04, 2026 06:21 pm

தமிழகத்தில் இனி புதுக் கட்சிகளே இல்லையே! குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வந்தால் தான் உண்டு!

Reply Rate this
மார் 04, 2026 12:59 pm

இதே பல்லவி தான் 3 மாசமா ஒலிக்குது? ஒன்னும் நடக்கலையே?

Reply Rate this
மார் 04, 2026 11:19 am

நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி தங்கள் கூட்டணியில் இணைய தயாராக உள்ளது.

Reply Rate this
மார் 04, 2026 07:35 am

இனி இணைவதற்கு யாரவுது ஒரு மூலையில் ஒரு புதுக்கட்சி ஆரம்பித்தால் தான் போச்சு.

Reply Rate this