Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


கேள்வி மேல் கேள்வி கேட்ட அமித் ஷா; பதிலளிக்க முடியாமல் தடுமாறிய பழனிசாமி

கேள்வி மேல் கேள்வி கேட்ட அமித் ஷா; பதிலளிக்க முடியாமல் தடுமாறிய பழனிசாமி

- நமது நிருபர் -

தொகுதி பங்கீட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கறாராக இருப்பதால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சிலர் கூறியதாவது: கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முறிந்தது. அதன்பின், 2025 ஜனவரியில், பழனிசாமி உறவினர் ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில், வருமான வரித்துறை சோதனை நடத்தியதில், பல நுாறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு புகாரில் ராமலிங்கம் சிக்கினார். இதையடுத்து, பழனிசாமி மகன் மிதுன், டில்லியில் பல வாரங்கள் முகாமிட்டும், எதுவுமே நடக்கவில்லை.
எனவே, அமித் ஷாவை கடந்த மார்ச்சில் பழனிசாமி சந்தித்தார். அதன்பின் ஏப்ரலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதி செய்யப்பட்டது. ஆனால், தே.ஜ., கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லாதது, தொகுதி பங்கீட்டை நடத்தாமல் இருப்பது ஆகிய காரணங்களால், பழனிசாமி மீது பா.ஜ., தலைமைக்கு கோபம் ஏற்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் டில்லி சென்ற பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, ஊழல் புகாரில் சிக்கியுள்ள தி.மு.க., அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பழனிசாமி கேட்டிருக்கிறார்.
அதற்கு அமித் ஷா, 'அதற்கான வேலை நடக்கிறது. அதை மட்டும்தான் இந்த தேர்தலுக்கான பிளானாக வைத்திருக்கிறீர்களா; உங்களால், தே.ஜ., கூட்டணியின் தேர்தல் பிளான் சொதப்புகிறது. தே.மு.தி.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றீர்கள். ஆனால், அதை முறையாக செய்து முடிக்கவில்லை.
'தேர்தல் நெருக்கத்திலும், கூட்டணியை வலுப்படுத்தி தொகுதி பங்கீடை சுமுகமாக முடிக்காமல் இழுத்துக்கொண்டே போவது, எதிர் அணியினருக்கே சாதகமான சூழலை ஏற்படுத்தும். அதனால், சென்னை திரும்பியதும் கூட்டணிக் கட்சியினர் அனைவரையும் அழைத்து பேசி, தொகுதி பங்கீட்டை வேகமாக இறுதி செய்யுங்கள்' எனக் கூறியுள்ளார்.
மேலும், தென் மாவட்டங்களில் 12, மத்திய மண்டலத்தில் ஏழு, கொங்கு மண்டலத்தில் 13, வடக்கு மற்றும் சென்னை மண்டலத்தில் 10 என, 42 தொகுதிகள் பட்டியலை, அமித் ஷா கொடுத்துள்ளார். அதேபோல், கூட்டணியில் இருக்கும் அ.ம.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகளுக்கு, 25 தொகுதிகளை பிரித்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அதன்படி, தொகுதி பங்கீடு நடந்தால், பா.ம.க.,விற்கு 18 தொகுதிகள் போக, 150 இடங்களுக்குள் அ.தி.மு.க., சுருங்கி விடும். இதற்கு விருப்பம் இல்லையென்றாலும், அமித் ஷாவிடம் நேரடியாக எதுவுமே பேச முடியாமல், பட்டியலை வாங்கிக் கொண்டு, மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்து சொல்வதாக கூறி, பழனிசாமி சென்னை திரும்பி இருக்கிறார்.
தொகுதி பங்கீட்டில் அமித் ஷா நேரடியாக ஈடுபடுவதால், பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை எப்படி கையாள்வது என புரியாமல் பழனிசாமி கடும் குழப்பத்தில் இருக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

50 சதவீதம் விருப்ப தொகுதிகள்?



பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.நகர், ராசிபுரம், ராஜபாளையம் உட்பட பா.ஜ., கேட்ட தொகுதிகளை அ.தி.மு.க., ஒதுக்கவில்லை. இந்த நிலை, வரும் தேர்தலில் ஏற்படக் கூடாது என்பதில், அமித் ஷா உறுதியாக உள்ளார். கடந்த உள்ளாட்சி, லோக்சபா தேர்தல்களில் பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டு கிடைத்த இடங்களின் விபரங்களை பழனிசாமியிடம் தெரிவித்து, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 'வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள வேளச்சேரி, தி.நகர், மயிலாப்பூர், திருத்தணி, காஞ்சிபுரம், தென்காசி, சிங்காநல்லுார், பழனி, ராசிபுரம் உட்பட 25 தொகுதிகள் கட்டாயம் வேண்டும்' என பா.ஜ., கேட்டுள்ளார். அதற்கு பழனிசாமி, 'பா.ஜ., கேட்கும் தொகுதிகளில் பெரும்பாலானவை, அ.தி.மு.க.,விற்கு சாதகமானவை. எனவே, பா.ஜ.,விற்கு ஒதுக்கும் மொத்த தொகுதிகளில், 50 சதவீதம், பா.ஜ., விரும்பும் இடங்களாக இருக்கும்' என கூறியுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.



மார்ச் 7, 8ல் பிரசாரம்



தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த 2025 ஜூலை 7 முதல், 'மக்களை காப்போம்;- தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், தொகுதிவாரியாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, வரும் 7ம் தேதி மாலை 4:30 மணிக்கு, ஈரோடு மாவட்டம் அந்தியூர்; 8ம் தேதி மாலை 4:00 மணிக்கு பெருந்துறை; மாலை 5:30 மணிக்கு பவானி ஆகிய தொகுதிகளில் பழனிசாமி பிரசார பயணம் மேற்கொள்கிறார்.

Advertisement

ராமலிங்கம் மற்றும் மிதுன் குறித்து ங்கும் எழுதி இருக்கிறார்கள் . அமித் ஷா மட்டும் அது பற்றி பேசாமலா கூட்டணி சீட்டு எண்ணிக்கை பற்றி பேசி இருப்பார் ? கையில் குச்சியை வைத்து மிரட்டிக்கொண்டே இருந்தா அடிமை பாவம் . ரொம்போ அழுதுடுவாரு. அழவைக்காமல் வேலை வாங்க பாருங்க . பார்க்க பரிதாபமா இருக்கு . எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வசனம் தான் நினைவுக்கு வருது. இதுல சம்பந்தப்பட்டுள்ள ரெண்டு போரையும் பார்த்தாலும் அந்த வசனம் தான் நினைவுக்கு வருது . அது தான் ரொம்போ சங்கடமா இருக்கு .

Reply Rate this
மார் 04, 2026 07:49 pm

கழுதைக்கு வாக்கப் பட்டால் எல்லாக் கஷ்டங்களையும், அவஸ்தைகளையும் பொறுத்துக் கொண்டு தான் போக வேண்டும்! வேறு வழி?

Reply Rate this
ஹி...ஹி...நீ காங்கிரஸ் கட்சி நினைப்பதை சொல்லிவிட்டேயை வேணு
மார் 04, 2026 08:27 pm
Rate this
ஆமாம் வேணு திமுக தலைமை சோனியாவை பார்த்தசா
மார் 04, 2026 08:28 pm
Rate this
மார் 04, 2026 02:32 pm

முருங்கை மரம் ஏறித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளார் இபிஎஸ்!

Reply Rate this
என்ன வேணு. அங்கே தவேக அடிக்கும் அடி தாங்கமுடியாம இந்த வந்து அலுவுறே
மார் 04, 2026 04:44 pm
Rate this
மார் 04, 2026 01:44 pm

கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்று கூவியவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

Reply Rate this
மார் 04, 2026 12:57 pm

பழனிச்சாமிக்கு ஹிந்தி தெரியாது. எனவே தடுமாறினார்.

Reply Rate this
மார் 04, 2026 12:53 pm

இன்றைய அரசியல் சூழலில் இருமுனை போட்டி மட்டுமே திமுகவை பூஜ்யமாக்க முடியும். திமுக கூட்டணியை எதிர்த்து அதிமுக கூட்டணி +TVK மற்றும் NTK போட்டியிட்டால்மட்டுமே இது சாத்தியம். அதிக வோட்டு வித்தியாசத்தில் தோற்பதைவிட குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற முயல்வதே அதிமுக கூட்டணிக்கு சரியாக இருக்கும்.

Reply Rate this
ஓபிஎஸை பாஜக இயக்குது.., நடிகர் கமலை பாஜக இயக்குது.., தேமுதிகவை பாஜக இயக்குது.., நடிகர் ரஜினிகாந்தை பாஜக இயக்குது.., நடிகர் சீமானை பாஜக இயக்குது.. பாஜகவின் B டீம்.., நடிகர் விஜயை பாஜக இயக்குது.. என யாரை எல்லாம் பாஜக இயக்குவதாக.., கொத்தடிமை உபிஸ்கள் தங்கள் கொத்தடிமை ஊடகங்கள் மூலமாக ஓயாமல் ஒப்பாரி வைத்து தமிழக மக்களை ஏமாற்றி வந்தார்களோ, உண்மையாகவே அவங்க எல்லோரையுமே தீமுக தான் இயக்கியுள்ளது என்ற உண்மை இப்பதான் தமிழக மக்களுக்கு நன்கு தெரிகிறது. ஒவ்வொருவரின் முகமூடியும் வரிசையாக கழண்டு வந்து அம்பலமாகிறது. ஓபிஎஸை தர்மயுத்தம் செய்ய வைத்து, அதிமுகவை உடைத்து, 2019, 2021, 2024 என வரிசையாக 3 தேர்தல்களில் நோகாமல் ஜெயித்த ஸ்டாலின் தீமுகவின் திராவிட சூழ்ச்சி இதோடு வெட்ட வெளிச்சம் ஆனது. இனிமேல் வரும் தேர்தல்களில் தீமுகவை பழைய மாதிரி வழக்கம்போல உட்கார வைத்து தமிழ்நாட்டு மக்கள் கதற விடுவார்கள். செத்தது தீமுக. தீமுக எனும் தீய சக்தியை_ஒழிப்போம்
மார் 04, 2026 01:29 pm
Rate this
மார் 04, 2026 11:24 am

அதிமுக இனி தவெகாவுடன் சேர்ந்து போட்டியிடவேண்டும். டில்லியிலே உட்கார்ந்து கொண்டு அமித்தோட அலும்பு தாங்க முடியலே.

Reply Rate this
Thravisham - Bangalorw
ஒனக்கு ஓர் ஓசி பிரியாணி பார்சல். ஒன்னோட கருத்துக்கு 200 ரூவாவே வேஸ்ட்
மார் 04, 2026 03:21 pm
Rate this
உன் பழக்க தோசத்தை இப்படி வெளிகாட்டணுமா?
மார் 04, 2026 05:08 pm
Rate this
மார் 04, 2026 11:19 am

விடியா அரசு தனித்துநின்றால் பாஜக தனித்து நிற்கும்.

Reply Rate this
மார் 04, 2026 10:29 am

இந்தவாட்டி 2 தொகுதி வெற்றி பெறுவதே கடினம் தான் போல ....

Reply Rate this
திமுகவை தாவேக அடிக்கிற அடி அப்படிதான்
மார் 04, 2026 04:45 pm
Rate this
மார் 04, 2026 10:25 am

தமிழ்நாட்ல பாஜகவும் காங்கிரசும் அடுத்தவங்க தோள்லதான் சவாரி செஞ்சாகனும் இல்லனா குப்புற விழனும்

Reply Rate this
தாவேக விஜய் அடிக்கிற அடி எப்படி இருக்கு பாலாஜி
மார் 04, 2026 04:46 pm
Rate this