Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


ராஜ்யசபா எம்.பி.,யாகிறார் சுதீஷ்?

ராஜ்யசபா எம்.பி.,யாகிறார் சுதீஷ்?

சென்னை: தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா 'சீட்' ஒதுக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க., சமீபத்தில், தி.மு.க., கூட்டணியில் இணைந்தது. கூட்டணியில் இணையும் முன்பாக, ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டை, தே.மு.தி.க., கேட்டு இருந்தது. அதற்கு தி.மு.க.,வும் ஒப்புக் கொண்டிருந்தது. நேற்று இரவு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அறிவாலயத்துக்கு, தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் வந்தார்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ராஜ்யசபா எம்.பி., சீட்டுக்கான ஒப்பந்தத்தில், சுதீஷ் கையெழுத்திட்டார்.

அதன்பின், அவர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., 'சீட்' வழங்கப்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கும், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவுக்கும் நன்றி. தே.மு.தி.க., வேட்பாளரை, பிரேமலதா இன்று அறிவிப்பார். சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை குறித்து, இன்னும் ஒரு வாரத்தில் பேசப்படும். தொகுதி பங்கீடு சுமுகமாக நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தே.மு.தி.க., சார்பில், சுதீஷ், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

மார் 05, 2026 05:54 am

இதுவும் வேஸ்ட் , அங்கே அன்புமணியும் waste

Reply Rate this
மார் 04, 2026 11:13 pm

சந்தடி சாக்குலே இவருக்கு வந்த சுக்கிர தசையை பாருங்கடா எங்கே இருந்த இந்த ஆசாமிக்கு விஜய் காந்த் இருந்தபோதே இவரைப்பற்றி யாருக்குமே தெரியாது அக்காளின் அன்பு பரிசு நடக்கட்டும் நாராயாணா

Reply Rate this
மார் 04, 2026 11:20 am

ஒரு அக்காளை வைத்துக்கொண்டு அவள் புருஷன் தயவில் வளர்ந்து இன்று அதே அக்காள் மூலம் பதவி.

Reply Rate this
மார் 04, 2026 11:13 am

ஒருவழியா வாழ்நாள் கனவை திமுக மூலம் அடைந்தே விட்டார்.

Reply Rate this
மார் 04, 2026 09:48 am

விளங்கிடும்

Reply Rate this
மார் 04, 2026 09:06 am

கட்சித் தலைமைக்கு அக்கா? டெல்லிப் பதவிக்கு தம்பி? பாவம், பரிதாப நிலையில் கேப்டனின் உண்மை விசுவாசிகள்.ஆயுள் முழுக்க தி.மு.கவில் உழைத்தோர் ஒரு கூட்டுறவு சங்க உறுப்பினர் கூட ஆக முடியாத நிலையில் நேற்று வரை எதிரிகளுடன் கை கோர்த்துக் கொண்டு, அவர்களுடனும் பேசிக் கொண்டு இருந்தவர்களுக்கு வந்தவுடன் ராஜ்யசபா எம்.பி பதவி. ஏற்கெனவே ஒரு ராஜ்யசபா பதவியை கமலஹாசனுக்கு கொடுத்தாச்சு. இப்ப இதையும் பிரேமலதா தம்பிக்கு கொடுத்தாச்சு. அடுத்து தர்மயுத்தம் ஓ.பி.எஸ் மகனுக்கு எந்தப் பதவியோ?

Reply Rate this
மார் 04, 2026 08:44 am

இதற்காகத்தானே இவ்வளவு நாள்.....எடுத்தாய் ராஜகுமாரா? இப்படி பெறுவதில் தந்தைக்கு களங்கம் கற்பித்த தனயன்.வெ, சூ, சொ.....எதுவுமில்லாத தாய், மகன், மாமன்.

Reply Rate this
மார் 04, 2026 08:24 am

இவரால் கட்சியை வளர்க்க முடியாது விஜயகாந்த் வாரிசு விஜய பிரபாகரனுக்கு வழங்க வேண்டும்

Reply Rate this
விஜய் பிரபாகரன் மட்டும் அறுத்து தள்ளிட போறாக்கும். திமுகவிற்கு ஒரு இடம் நஸ்டம். இந்த கட்சி ஒருவருடம் கூட எந்த கட்சியிடமும் விசுவாசம் காட்டியதே இல்லை.
மார் 04, 2026 11:16 am
Rate this