திருப்பரங்குன்றம் தொகுதியில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா நிற்கிறார். எதிர்த்து மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய், அ.ம.மு.க., டேவிட் அண்ணாதுரை நிற்கின்றனர்.தொகுதியில் கணிசமாகவுள்ள இளைஞர்களை கவரும் வகையில், 'டிபி.கே.,ஜாப்ஸ்.காம்' என்ற, பிரத்யேக இணையதளத்தை, அ.தி.மு.க.,வினர் தேர்தலுக்காக துவக்கிஉள்ளனர்.வேட்பாளர் மகனான, ஐ.டி., பிரிவு மண்டல செயலர் ராஜ்சத்யன் பின்னணியில் துவங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், இளைஞர்கள் தங்கள் கல்வி தகுதி, வயது உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவர்களது கல்வி தகுதிக்கு ஏற்ப தொழில் நிறுவனங்களின் காலியிடங்கள் அதில் இருக்கும். பிடித்த பணியை தேர்வு செய்யலாம். இதற்காக, 200 தொழில் நிறுவனங்களுடன் பேசி விபரங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். 'இந்த, 'ஹைடெக்' பிரசாரம்லாம் நம்மூர்ல செல்லுபடி ஆவாது' என, உ.பி.,க்கள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக சொல்கின்றனர்.---
வாசகர் கருத்து