Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது: முதல்வர் ஸ்டாலின் 'பளீச்'!

ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது: முதல்வர் ஸ்டாலின் 'பளீச்'!

சென்னை: ''ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்'' என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, இந்தியா டுடே தொலைக்காட்சி கருத்தரங்கில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கருத்துக்கணிப்பின் படி திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே உள்ள ஓட்டு வித்தியாசம் 12 சதவீதம். கருத்து கணிப்பை உண்மையாக்குவோம். 3 சதவீதம் ஓட்டு வித்தியாசம் இருந்தாலே பெரும்பாலான இடங்களில் வெற்றி கிடைக்கும். கருத்துக்கணிப்பு முடிவுகள் எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. 65க்கும் மேற்பட்ட விருதுகள் தமிழகத்தை தேடி வந்துள்ளன.

குடைச்சல்

மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதிலும் திமுகவுக்கு குடைச்சல் கொடுப்பதில் கவனம் செலுத்துகிறது. தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் முன்னோடி திட்டங்களாக மாறியுள்ளன. திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும மத்திய அரசாலேயே தமிழகத்தின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. அனைத்து வகை புள்ளி விவரங்களிலும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

ஜீரோ

மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. திமுக அரசு தொடர்ந்தால் தான் தமிழகம் நன்றாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

பல நன்மைகளை செய்து வரும் தமிழக அரசுக்கு மத்திய அரசு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் ஜீரோ கொடுத்த பாஜவுக்கு தேர்தலில் மக்கள் ஜீரோவை திருப்பி தருவர். மத்திய அரசு தமிழகத்துக்கு துரோக்கத்தையும், அநீதியையுமே செய்து வருகிறது.

ஒத்துவராது!

பிறகு கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும்.
இடையில் சிலர் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு சதி செய்கின்றனர். திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் நன்றாக இருக்கும். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்.
கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா என்பதற்காக சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர்.
சிலரின் சதி பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை.

ராகுல் சகோதரர்

அரசியலை தாண்டி என்னுடைய சகோதரர் போன்றவர் ராகுல். திமுக, காங்கிரஸ் இணைந்து தான் சட்டசபை தேர்தலை சந்திக்கும். 2021ம் ஆண்டு தேர்தலை விட 2026ம் ஆண்டு தேர்தல் கடினமாக இருக்கும் என்பது எதிர்க்கட்சிகள் மக்களை குழப்ப பேசும் பேச்சு. கருணாநிதியிடம் இருந்து உழைப்பை கற்றுக் கொண்டேன், அதையே எனது மகனுக்கு கற்றுத் தருகிறேன். எதையும் எதிர்பார்க்காமல் உழைத்தால் தான் அரசியலில் முன்னுக்கு வர முடியும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

Advertisement

பிப் 11, 2026 05:16 pm

காங்கிரஸ் மன்மோகன் அமைச்சரவை 10 ஆண்டு 500 லட்சம் கோடி ஊழல் பணம் வாரி சுருட்டிய போது... ஐஸ் கிரீம் சாப்பிட்ட மாதிரி இருந்ததா? இப்ப கசக்குதா?

Reply Rate this
///500 லட்சம் கோடி ஊழல்//// இது போன மாசம்....? இப்ப, இந்த மாச கணக்கு என்ன...? கூட்டி கழிச்சு பாரு... கணக்கு அதிகமா வரும்...? “தேனெடுப்பவன் புறங் கையை நக்காமல் இருக்க மாட்டான்”... இது பழமொழி... இவனுங்க என்னவோ இந்திரன், சந்திரன், அரிச்சந்திரன் மாதிரி கமெண்ட் போடுறாங்க...? இவங்க ஆட்சியை விட்டு இறங்குனாதானே இவனுங்க எவ்வளவு சுருட்டினாங்க...ன்னு தெரியும்...?
பிப் 11, 2026 06:05 pm
Rate this
பிப் 11, 2026 05:13 pm

அடுத்து டாய்லெட் பேப்பார்கள் தயார்.

Reply Rate this
பிப் 11, 2026 04:49 pm

ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது என்றால் கொள்ளை அடிப்பதில்லாவது பங்கு கொடுங்கள் என்று கூட்டணி கட்சிகள் கேட்கிறார்கள். ஒரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் குறைந்தது 5 லட்சம் கோடி சம்பாதித்து விடுகிறார்கள்.

Reply Rate this
பிப் 11, 2026 04:46 pm

ஆட்சியில் பங்கு அடிமடியில் கை வைத்து விடும்.

Reply Rate this
பிப் 11, 2026 04:15 pm

மக்களே புரியுதா,,

Reply Rate this
பிப் 11, 2026 04:04 pm

அதாவது நாங்கள் மட்டும் ஆட்சியில் இருந்து கொள்ளை அடிப்போம். அடுத்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு கொஞ்சம் பிச்சை போடுவோம் .

Reply Rate this
பிப் 11, 2026 04:03 pm

கூட்டணி ஆட்சி ஒத்துவராதா? தமிழகத்துக்கு தனியாக கொம்பு முளைத்திருக்கிறதா ? எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த ஆட்சி கூட்டணி ஆட்சிதான்

Reply Rate this
பிப் 11, 2026 03:36 pm

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதடா சாமி . தமிழகத்துக்கு ஒத்து வராதா திமுக வுக்கு ஒத்து வராதா? மிகவும் அபத்தமான செயற்கையான கேவலமான பேச்சு ...

Reply Rate this
பிப் 11, 2026 03:12 pm

உங்களுக்கு தான் NDA கூட்டணியைவிட 12% சதவீதம் வாக்கு அதிகமாக இருக்கிறதே அப்போ கூட்டணி இல்லாமல் தனியாக நிற்கலாமே கொஞ்சம் கூட உங்கள் கொள்கைக்கு ஒத்து வராத காங்கிரஸ்வுடன் கூட்டணி ஏன்?

Reply Rate this
பிப் 11, 2026 02:38 pm

பிஜேபிக்கு ஜீரோ கொடுத்த மக்களுக்கு பிஜேபி ஜீரோ கொடுக்கவில்லை. வாயை திறந்தா பொய்யத்தவிர வேறொன்றும் இல்லை.

Reply Rate this