பன்னீர்செல்வம் முடிவுக்கு துரோகிகளே காரணம்: சசிகலா
சென்னை: 'தான் மட்டுமே அ.தி.மு.க., என தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களே, பன்னீர்செல்வத்தின் முடிவுக்கு காரணம்' என சசிகலா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் இணைந்தது, மிகவும் துரதிருஷ்டவசமான முடிவு. தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய தீய சக்தியாக தி.மு.க., இருக்கும் நிலையில், தாய் கழகம் என நினைத்து தி.மு.க.,வில் சேர்வது தவறான முடிவு.
ஆனால், இந்த நிலைமைக்கு காரணம், ஒன்றே ஒன்று தான். அவர் வேறு யாருமில்லை. 'தான் மட்டும் தான் அ.தி.மு.க.,' என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்தான்.
தி.மு.க.,வின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு, அ.தி.மு.க.,வில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வரும் துரோகிகளின் அழிவு காலம் நெருங்கி விட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

தாங்களும் ஒரு காரணகர்த்தா என்பதை மறக்க கூடாது