Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


ஒரு ராஜ்யசபா சீட்டும் 28 தொகுதிகளும்: நீண்ட இழுபறிக்கு பின் காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக

ஒரு ராஜ்யசபா சீட்டும் 28 தொகுதிகளும்: நீண்ட இழுபறிக்கு பின் காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: கடும் இழுபறியில் இருந்து வந்த தொகுதிகள் ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக -காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தானது. காங்கிரசுக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக ஒதுக்கி உள்ளது.
தமிழகத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. இரு கட்சிகளின் தலைமையும், நட்புடன் இருந்ததால், தேர்தலை எவ்வித இடையூறுமின்றி சந்தித்து வந்தன. ஆனால், சமீபகாலமாக நடந்த பல்வேறு நிகழ்வுகள், இரு கட்சி களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.

நெருடல்

எனினும், வரும் சட்டசபை தேர்தலை, காங்கிரசுடன் இணைந்தே எதிர்கொள்ள தி.மு.க., தரப்பு முடிவெடுத்தது. ஆனால், நடிகர் விஜய், தன் கட்சியுடன் கூட்டணி சேருவோருக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் எனக் கூறியதும், களம் மாறத் துவங்கியது. காங்கிரசை நோக்கி, த.வெ.க., வலுவான துாண்டிலை வீச, தி.மு.க.,வுடன் இருந்த நெருடல்களை காங்கிரசார் பெரிதாக்கினர். த.வெ.க.,வுடன் கூட்டணி செல்லலாம் என வெளிப் படையாக பேசத் துவங்கினர்.

இந்த சூழலில், தி.மு.க., தரப்பில் தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேசிய காங்கிரஸ் தரப்பு, '41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, உள்ளாட்சி அதிகாரத்தில் 25 சதவீத பங்கு, இரண்டு ராஜ்யசபா சீட், துணை முதல்வர் பதவி' என, ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்தது.
தி.மு.க., தரப்பில், 'காங்கிரசுக்கு 21 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும்' என, 'கூலாக' தெரிவித்தனர். இது காங்கிரஸ் தலைமையை, தி.மு.க., மீது அதிருப்தி அடைய வைத்தது.

நிர்ப்பந்தம்

இதற்கிடையில், தமிழகத்தில் காலியாக இருக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில், வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ளதால், அதற்குள் கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், இரு தரப்புக்கும் ஏற்பட்டது. நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சென்னையில் முதல்வர் ஸ்டாலனை சந்தித்து பேசினார். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் உடன்இருந்தார்.
இதன் பிறகு அவர் டில்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் பேசினார்.

இந்நிலையில், இன்று மாலை திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, காங்கிரசின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவினர் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்துடன் ராஜ்யசபா சீட் ஒன்றை வழங்க திமுக முன்வந்ததை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது. அதில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை சேர்ந்து கையெழுத்து போட்டனர்.

இதுகுறித்து நிருபர்களிடம் செல்வபெருந்தகை கூறியதாவது;
இன்று திமுக காங்கிரஸ் இடையே தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. 28 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது. ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைமை விரைவில் அறிவிக்கும்.
தொகுதி ஒதுக்கீட்டில் எந்த தாமதமும் இல்லை. மனநிறைவோடு இருக்கிறோம். மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார்.

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. அப்போது காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தற்போது 2026 சட்டசபை தேர்தலில் கூடுதலாக வெறும் 3 தொகுதிகள் காங்கிரசுக்கு தரப்பட்டு உள்ளன. இந்த 3 தொகுதிகளை பெறுவதற்காக 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காங்கிரஸ் காத்திருந்தது.

Advertisement

மார் 05, 2026 02:38 am

திருவண்ணாமலை திருச்செந்தூர் பழனி மருதமலை சுவாமிமலை மதுரை மீனாட்சி அம்மன் திருநல்லார் திருப்பரங்குன்றம் தஞ்சாவூர் ராமேஸ்வரம் திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளி அம்மன் கோயில் திருநாகேஸ்வரம் பழமுதிர்ச்சோலை சிவன்மலை கோவை கோணியம்மன் ஈச்சனாரி விநாயகர் சிதம்பரம் நடராஜர் திருச்சி ஸ்ரீரங்கம் வைத்தீஸ்வரன் கோயில் நாமக்கல் ஆஞ்சநேயர் போன்ற கோயில்களில் விழுந்து விழுந்து காங்கிரஸ் கும்பல் 4 மாதங்களாக அங்கப்பரதாச்சனம் செய்தது வெறும் 3 சட்டசபை சீட்டுக்குத்தானா? இதை நேராகவே "ஐயா கொஞ்சம் சேத்து குடுங்க எசமான்" என ராப்பிச்சை கேட்டிருந்தாலே திருட்டு முன்னேற்றக் கழகம் பிச்சை போட்டிருக்குமே

Reply Rate this
மார் 05, 2026 12:49 am

Business deal…. The karunanithi Family is Bringing all the robbers together to loot TN Unfortunately TN people will never understand their game, they continue to vote for these corrupted and uncivilised group

Reply Rate this
மார் 05, 2026 12:07 am

இது தி மு க வின் ஐடியா தான்,. த வெ க வுடன் கூட்டணி சேரக்கூடாது என்பதற்க்கான இழுபறி. இப்போ எப்படி ஆட்சி அதிகாரம் இல்லையென்றவுடன் ஒத்துக்கொண்டார்கள். தோல்வியை தழுவ வாழ்த்துக்கள்.

Reply Rate this
மார் 04, 2026 11:42 pm

8 தொகுதிகளில் ஜெயித்து விடுவார்களா??

Reply Rate this
மார் 04, 2026 11:33 pm

எல்லாம் டிராமா கொலை கொள்ளை மக்களுக்கு வடை சுண்டல்

Reply Rate this
மார் 04, 2026 10:52 pm

வெறும் 28 சீட்டுக்கு இழுபறின, அப்ப எவ்ளோ கம்மியா முன்னாடி பேசி இருப்பாங்க DMK, பாவம் காங்கிரஸ் இதுக்காக எத்தனை அங்கபிரதச்சனம் செய்தது!

Reply Rate this
மார் 04, 2026 10:46 pm

பாஜக அதிமுக விக் கு எவ்வளவு எப்போது ஒதுக்கு வாக ???

Reply Rate this
மார் 04, 2026 10:32 pm

மத்தியில் காங்கிரசுக்கு திமுக அடிமை. மாநிலத்தில் திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை

Reply Rate this
மார் 04, 2026 10:31 pm

இன்னும் அறிவாலய வாசலில் சுண்டல் விற்பவர்கள் மட்டும்தான் பாக்கி. அவர்களும் ஒரு கட்சி வைத்திருந்தால் அவர்களையும் தி.மு.க கூட்டணியில் இணைத்திருப்பார்கள்.

Reply Rate this
மார் 04, 2026 10:27 pm

உண்மையில் பலவீனமான கட்சி எது என்றால் தி. மு.க தான். ஏனெனில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் தற்போது துச்சமாக நினைக்கும் காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணியில் உள்ளார்கள். தனித்தே நின்றதில்லை. த வெ க வின் வருகைக்கு பிறகு திரு மா வே பங்கு வேண்டுமென்றார். அவரை அடக்கி வைத்தார்கள். காங்கிரெஸ்ஸோ விஜய் உடன் பங்குபோட தயாரானதும் கோபாலபுரம், கொளத்தூர், சேப்பாக்கம் நடுங்கியது அதிர்ந்தது தளர்ந்தது. . கூட்டணி அமைக்க அன்புமணி ஒத்துவராததால் உடனே பா ம க வை துண்டாடினர். தே மு தி க வை உள்ளிலுத்து பா ம க வின் இராமதாசையும் அருகில் வைத்து தனக்கு தானே தலைவன் என்று கூறிக்கொண்டு காங்கிரஸுக்கு தண்ணி காட்டுவதாக எண்ணி தானே தண்ணி குடித்தார். பெருந்தொகை மூலமாக நாடகம் நடத்தி விஜயின் குடும்பப்பிரச்சினையை இடையில் ஆட்களை வைத்து சமூகத்தில் கெட்டபெயர் உருவாக்க முயன்று அதனால் காங்கிரெஸ்ஸை தன் உடன் நெருங்க வைத்து முப்பத்திரண்டு கட்சிகள் புடைசூழ புலி வருது பயப்படுபவர் எல்லாம் என் முதுகின்மீது ஏறிக்கொள்ளவும் என்ற பாணியில் படாதபாடுபட்டு வேண்டாத காங்கிரெஸ்ஸாக வெளியே காட்டிக்கொண்டு உள்ளே தூக்கம் வராமல் கஷ்டப்பட்டது தி மு க அன்றி வேறு யாருமில்லை. தனியே நிற்க திராணி இல்லாத தி மு க எல்லாம்..

Reply Rate this