Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 தி.மு.க., கனிமொழியுடன் துரை வைகோ சந்திப்பு

 தி.மு.க., கனிமொழியுடன் துரை வைகோ சந்திப்பு

சென்னை: 'தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக திருச்சி அறிவிக்கப்படும் என்ற வாக்குறுதியை, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும்' என, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் கனிமொழியிடம், திருச்சி ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ கேட்டுக்கொண்டார்.

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழியை சந்தித்த துரை வைகோ, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டிய ஆறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

அதில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள்:

திருச்சியை தலைமையிடமாக கொண்டு, தனி அரசு விரைவு போக்குவரத்து பிரிவு உருவாக்க வேண்டும். திருச்சியை தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும். திருச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை அமைப்பதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

திருச்சியில் பல்கலை நகரம் அமைக்க வேண்டும். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள 'சிப்காட்' தொழில் பூங்காவை, உலகளாவிய மின்னணு மற்றும் உற்பத்தி மையமாக மேம்படுத்த வேண்டும்.

டில்லியில், பல்கலை உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பயில வரும் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தமிழக மாணவ - மாணவியருக்கு தனி விடுதி அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

Advertisement