Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் புதிய கட்சி உதயம்

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் புதிய கட்சி உதயம்

- நமது நிருபர் -

த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தில், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், எம்.ஜி.ஆர்., அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சி உதயமாகி உள்ளது.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான, அ.தி.மு., தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்திற்கு, முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அரசியல் ஆலோசகராக இருந்தார்.

பன்னீர் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்றவர்கள், தி.மு.க.,வில் சேர்ந்து விட்டனர். எம்.பி., தர்மர், பழனிசாமி பக்கம் போய்விட்டார்.

இந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், எம்.ஜி.ஆர்., அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை, காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் ரஞ்சித்குமார் துவக்கி உள்ளார்.

அதற்கான துவக்க விழா, சென்னையில் நாளை நடக்கிறது. கட்சி கொடி, கொள்கை, கூட்டணி அறிவிக்கும் நிகழ்ச்சி, வரும் 23ம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள அறம்வளர்த்தநாயகி கோவிலில் நடக்க உள்ளது.

சட்டசபை தேர்தலில், த.வெ.க.,வுடன் இக்கட்சி கூட்டணி அமைக்கும்என தெரிகிறது.

Advertisement