காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட்; தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக உறுதி
நமது நிருபர்
காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று இன்று நடந்த தொகுதி பங்கீடு பேச்சில் திமுக உறுதி அளித்துள்ளது.
சென்னை அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் திமுக-இடையே முதற்கட்ட பேச்சு நடந்தது. திமுக குழுவினரை கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தினர். இதில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் கட்சியினர் கொடுத்துள்ளனர்.
பேச்சுவார்த்தை
அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு, ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று திமுக தலைமை உறுதி அளித்துள்ளதாக, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். இது குறித்து செல்வபெருந்தகை
நிருபர்களிடம் கூறியதாவது: பேச்சுவார்த்தை வெற்றிகரமாக
நம்பிக்கையுடன் சென்று கொண்டு இருக்கிறது.
எந்தவித பிரச்னையும் இல்லை. காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக
ஏற்கனவே முதல்வர் கூறி இருக்கிறார். திமுக உடன் எங்களுடைய கூட்டணி இயற்கையான கூட்டணி. நம்பிக்கையான, உறுதியான
கூட்டணி. தமிழ் மண்ணை பாதுகாக்கும் கூட்டணி.
திமுகவுடன்..
ஒருபோது
தமிழகத்தில் பாஜவுக்கும், அதிமுகவுக்கும் இடமில்லை என்பதில் நாங்கள் தெளிவாக
இருக்கிறோம். எங்கள் தலைவர் ராகுல் இந்த மண்ணின் மீது பற்று வைத்து
இருக்கிறார். தமிழகத்தின் மீது பற்று வைத்து இருக்கிறார்.
நாங்கள்
திமுகவுடன் தான் பேச்சு நடத்தி கொண்டு இருக்கிறோம். எத்தனை
தொகுதிகள் என்பது கையெழுத்திடும் போது தெரியவரும். இவ்வாறு
செல்வபெருந்தகை கூறினார்.
Advertisement
திமுக காங்கிரஸின் அடிமை. அவர்கள் கேட்பதை கொடுத்தே ஆகவேண்டும். இந்த இரண்டு கட்சிகளுமே மக்கள் விரோத கட்சிகள்.
பேசாமல் இந்த ஆளு தி மு க வில் சேர்ந்து விடலாம் எல்லா வசதிகளையும் மாறி மாறி அனுபவிக்கலாம் ,
ராஜ்யசபா சீட்டுக்கு எல்லாம் காங்கிரஸ் கெஞ்சுவது என்ன ஒரு கொடுமை.. மேய்க்கப்போவது எருமை இதில் என்ன பெருமை..
ஆமாம் ராகுல் மண்ணின் மீது பற்றுள்ளார் மக்களின் மீது அல்ல. கொள்ளை அடிப்பவன் மண்ணின் மீது தான் ஆசை படுவான் வளங்களை கொள்ளை அடிக்க. உனக்கு எல்லாம் ஒரு வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை .
உங்களை வேறு வழியில்லாமல் செய்து அமுக்க வேண்டும் என்பதற்காக தானே, டிசம்பரில் தொடுத்த விவாகரத்து வழக்கு செய்தியை பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் முன்பு வெளியிட செய்தது இந்த சாணக்கிய திருட்டு திராவிட மாடல் கட்சி. காங்கிரஸ் எலி பொறியில் அகப்பட்டது.
நமது முதல்வரின் தைரியம். பொங்கலுக்கு 3000 எப்பொழுது ஒரு 5000 இவைகளை கொடுத்தும் காங்கிரஸ் இல்லாவிட்டால் தோற்று விடுவோம் என்ற பயம்.
அங்க சொல்லி இங்க சொல்லி காங்கிரசை கடைசியில் கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டார். முதல்வரின் தைரியம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அந்த ஒரு சீட்டை... யாருக்கெல்லாம் பிரித்து கொடுப்பீர்கள் ??... அந்த ஒரு சீட்டுக்காக.... கான் கிராஸ் கட்சி ஆட்கள் எத்தனை பேரின் வேட்டி கிழியப் போகிறதோ ?