தி.மு.க., ஆட்சிக் காலம் கொடுமையானது: அண்ணாமலை பேச்சு
கோவை: 'தி .மு .க., ஆட்சி காலம் கொடுமையானது,' என, கோவையில் அண்ணாமலை பேசினார்.
கோவை, காளப்பட்டி நேரு நகரில் பா.ஜ., சக்தி கேந்திரா தெருமுனை தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., அருண்குமார், சிங்கை தொகுதி எம்.எல்.ஏ., ஜெயராமன் பங்கேற்றனர். கோவை மாவட்ட பா.ஜ., தலைவர் ரமேஷ் குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: அந்தந்த கட்சியினர் அவர்களது கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவர். பொதுமக்கள் தான், நடுநிலையோடு முடிவு செய்து ஓட்டளிப்பர். அவர்களுக்கு எடுத்துச் சொல்லவே தெருமுனை பிரசாரம்.
தமிழ்நாட்டில் இருண்ட ஆட்சி. 2006 ம் ஆண்டிலிருந்து 2011 வரை நடந்த தி.மு.க., ஆட்சிக்கு மக்கள் தண்டனை கொடுத்தனர். அடுத்த 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால், மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், அதைவிட கொடுமையாக உள்ளது.
கோவை பகுதியில் மின் கட்டண உயர்வால் 325 மில்கள் மூடப்பட்டு விட்டன. மின் கட்டணத்தை குறைத்து வேலை வாய்ப்பை உருவாக்கி இருக்க வேண்டும். கோவை மெட்ரோ ரயில் 34 கி.மீ., தூரம் கொண்டது. மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட திட்ட வரைவு தவறுகள் உள்ளன. மாற்றி அனுப்புமாறு கோரியது. 20 லட்சம் பேருக்கு மேல் மக்கள் தொகையை மாற்றி தர வேண்டும். கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரியது. ஆனால், மாற்றித் தரவில்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மெட்ரோ ரயில் வரும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது 4.64 லட்சம் கோடி மட்டுமே கடன் இருந்தது. தி.மு.க., ஆட்சியில் 6 லட்சம் கோடி கடன் கூடியுள்ளது. தற்போது 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனில் உள்ளது. இந்த கடன் மக்கள் மீதான கடனாக மாறி உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு, அவர் பேசினார்.
Advertisement
இப்போல்லாம் திமுக நிர்வாகிகள் அவர்களின் அல்லக்கைகள் பொது மக்கள் மேல் காரை விட்டு ஏத்தி கொல்கிறார்கள்... இருந்தாலும் நம் ஓட்டை அங்கேதான் போடணும்
என்ன செய்ய... நாங்கள் பொறுத்துக்கொள்ளவில்லையா? அதே போன்று நீங்களும் பொறுத்துக்கொள்ளுங்கள். தவிர, வேறு வழியும் இல்லை.
சிறுபான்மையினர் தாஜா, இந்து மத வெறுப்பு மற்றும் அரசியலை ஒரு குடும்ப வியாபாரமாக இருப்பது ஆகியவை தான் திமுகவின் பாதகம். மற்றபடி, ஊழல் உட்பட அணைத்திலும் திமுக, அதிமுக பங்காளிகள் ஒரே மாதிரி தான். இதை அண்ணாமலை அவர்களே முன்பு சொன்னார்களே. மற்றபடி, தமிழக முன்னேற்றத்துக்கு காரணம் அதன் மக்களும் மத்திய அரசின் சமூக பொருளாதார நடவடிக்கைகளே.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தைவிட அதிக கொடுமையான ஆட்சி பாஜக கடந்த பத்து ஆண்டுகளாக செய்கிறது
திமுக ஆட்சி கொடுமையானது அதிமுக கட்சி அதைவிட கொடுமையானது தெரியுமா கொடுமை என்றால் என்ன என்று தெரியுமா அண்ணாமலை கட்சி தலைவராக இருந்தானே சாதாரண தொண்டனாக மாற்றியது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி எந்த வேலை செய்ய முடியாமல் அண்ணாமலையை மாத்துனா மட்டும்தான் கூட்டணி வைப்பேன் உமக்கு எல்லாம் தெரியும் ஐயா அப்படி இருந்தும் சரி வாங்குன காசுக்கு வாய் திறந்து பேசணும் எல்லாம் பேசு வார்
அண்ணாமலை சார் அதிமுக ஆட்சி ஊராட்சி அதன் தலைவர் தண்டனை பெற்றுள்ளார் என்னென்னமோ சொன்ன வாய் இப்ப வந்து இப்ப பார்த்தா அதிமுக ஆட்சி நல்லா இருக்குன்னு சொல்றீங்க என்ன வாய் அண்ணா மேல உங்களுக்கு எல்லாம் எப்படி இவ்வளவு நாளா பல்லு கூசாம பேச முடியுது பேசறதுக்கு தகுதியை வளர்த்து கையா பஸ்ட் நீங்க

இந்திய வரலாற்றில் மிகவும் கொடுமையான ஆட்சியை கொடுத்திருப்பது திமுகவினர் மட்டும்தான். வரும் தேர்தலில் திமுக மெஜாரிட்டி இழந்து, படுதோல்வி அடைந்து கட்சியே முற்றிலும் ஒழியவேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி மலரவேண்டும்.