தி.மு.க., கூட்டணியால் தான் பம்பரம் சின்னம் கிடைத்தது
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, பல்வேறு போராட்டங்களுக்கு பின் மூடப்பட்டது. தற்போது, பசுமை தாமிரம் என்ற பெயரில் மீண்டும் அதை துவங்க, வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருந்து, அந்த ஆலை அமையவிடாமல் தடுக்க வேண்டும். தி.மு.க., தலைமைக்கும், காங்., அகில இந்திய தலைமைக்கும் இணக்கமும் புரிதலும் இருப்பதால், கூட்டணி தொடரும் என நம்புகிறேன்.
அ.தி.மு.க.,வினர் சொல்வது போல், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் காது குத்தும் வேலை இல்லை. தமிழக மக்கள் காதுகளில் பொன் ஆபரணம் பூட்டும் வேலை.
அ.தி.மு.க., தான், ம.தி.மு.க.,வுக்கு பம்பரம் சின்னத்தை பெற்றுக் கொடுத்ததாக கூறுவது தவறு. கடந்த 1999 லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து நான்கு எம்.பி.,க்களை பெற்றபோது தான், எங்களுக்கு பம்பரம் சின்னம் கிடைத்தது.
- வைகோ
பொதுச்செயலர், ம.தி.மு.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்