திருச்சி மாநாட்டில் கூடிய கூட்டம்: உற்சாகத்தில் நா.த.க., சீமான்
திருச்சியில் நடந்த நாம் தமிழர் கட்சி மாநாட்டுக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டம் கூடியதால், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகுந்த உற்சாகத்தில் திளைப்பதாக கட்சியினர் கூறுகின்றனர்.
இது குறித்து, நா.த.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
நடிகர் விஜய் த.வெ.க.,வை துவங்கும் முன், சீமானுடன் அடிக்கடி பேசி வந்தார். இதனால், இருவரும் கூட்டணியாக இணைவர் என எதிர்பார்த்தோம். ஆனால், விக்கிரவாண்டியில் நடந்த த.வெ.க., முதல் மாநாட்டில், சீமானை மறைமுகமாக விஜய் சீண்டினார்.
பதிலுக்கு விஜயை கடுமையாக சீமான் விமர்சனம் செய்யவே, அவர்களுக்குள் இருந்த உறவு முறிந்தது. குறிப்பாக, நா.த.க., வின் ஓட்டுகள், த.வெ.க.,வுக்கு சென்று விடும் என பேசப்பட்டது. அதனால், விஜயை கடுமையாக விமர்சித்து, இளைஞர்கள் ஓட்டுகளை தக்கவைக்க முயற்சி செய்தோம்.
இந்நிலையில், 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026' என்ற பெயரில், திருச்சியில் கடந்த 21ம் தேதி பிரமாண்ட மாநாட்டுக்கு சீமான் ஏற்பாடு செய்தார். 'மாநாட்டுக்கு கட்சியினர் குடும்பமாக வர வேண்டும்' என சீமான் உத்தரவிட்டார்.
நா.த.க.,வுக்கு இதுவரை வராத அளவுக்கு திருச்சி மாநாட்டிற்கு கூட்டம் வந்தது. அதை பார்த்து சந்தோஷமான சீமான், தனக்கு நெருக்கமானவர்களிடம், 'விஜயால் நா.த.க.,வுக்கு ஆபத்து இல்லை என்பதை, இந்த மாநாடு சொல்லிவிட்டது' என கூறிக் கொண்டிருக்கிறார்.
கூடவே, தன் கட்சி வேட்பாளர்களுக்கு போன் செய்து, தைரியம் ஊட்டுகிறார். மாநாடு வெற்றி அடைந்திருப்பது, கட்சியினரையும் உற்சாகமாக்கி இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
Advertisement

சீமான் அவர்கள் கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறும், கொள்கை பிடிப்பு கூட்டம் , வெற்றி பெறுவது வேறு , ஆனால் விஜய் கூட்டம் போல அரை வேக்காடு கூட்டம் இல்லை .