28 ம் தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிப்பு: ராமதாஸ்
சென்னை: '' யாருடன் கூட்டணி என்பது குறித்து நாளை மறுநாள்( பிப்.,28)க்குள் அறிவிக்கப்படும்,'' என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கூட்டணி குறித்து முடிவெடுக்க வன்னியர் சங்க மாநில தலைவர்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் பாமக நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இந்த ஆலோசனை நடந்தது.
இதன் பிறகு ராமதாஸ் கூறியதாவது: திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி அமையும். யாருடன் கூட்டணி என்பதை பிப்.,28 ம் தேதிக்குள் அறிவிக்கப்படும். கூட்டணி குறித்து இப்போது தெரிவிப்பதற்கான களம் சரியாக அமையவில்லை. தேர்தல் உத்திகள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதித்தோம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
Advertisement
For 2031 elections may be. Time is running out for 2026 elections

ஸ்டாலினிடம் பிச்சை எடுக்கிறது என்று முடிவு எடுத்துடீங்க்க. அதற்க்கு எதற்கு பீல்டப் எல்லாம்? சும்மாபொந்துக்குள் அடங்க வேண்டிய காலத்தில் தொடுப்பு எடுப்பு எல்லாம் பிரச்சனியாகி போச்சி. மகா கேவலம்.