/ செய்திகள் / வி.சி., மாவட்ட செயலர்கள் நியமனத்தில் இனி மாற்றம் ஏதுமில்லை: திருமாவளவன்

வி.சி., மாவட்ட செயலர்கள் நியமனத்தில் இனி மாற்றம் ஏதுமில்லை: திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கட்சியில் மாவட்ட செயலர்கள் நியமனம் முடிந்து விட்டது. அதை மனமுவந்து நிர்வாகிகள் ஏற்க வேண்டும்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள், மெல்ல மெல்ல நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றன. மாவட்டம், மண்டலம், மாநில நிர்வாகத்துக்கு அவ்வப்போது பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. அதனால், சில நாட்களில், மாவட்ட நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் அறிவித்தாக வேண்டும். ஓய்வு, உறக்கமன்றி, பல்வேறு சுமைகளுக்கு இடையே, இந்த பணிகளுக்கும் நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. தினமும் 15 மணி நேரம், பொது மக்கள், நிர்வாகிகளை சந்திப்பதிலேயே செலவாகிறது. எனவே, என்னை நேரில் வந்து சந்தித்து, நெருக்கடி தருவதை, நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும். அறிவிக்கும் பொறுப்புகளை மனமுவந்து ஏற்று, பணியாற்ற வேண்டும். அதில், மாற்றம் செய்வதாக இருந்தால், தேர்தலுக்கு பின், ஆற, அமர, பேசி முடிவு செய்வோம். தமிழகம் முழுதும், 234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலர்கள் அறிவிப்பு முடிந்து விட்டது. அதில், மாற்றம் ஏதுமில்லை; அதுவே இறுதியானது. காரைக்குடி மாவட்ட செயலர் தேன்மொழி, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலராகவும், திண்டிவனம் மாவட்ட செயலர் நாகராஜன், மண்டல துணை செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இருவரையும் அந்த பொறுப்பிலிருந்து விடுவித்ததற்கு, நானே முழு பொறுப்பேற்கிறேன். அவர்கள் இருவரும் எனக்காக இதை பொறுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sun
பிப் 07, 2026 09:52

234 தொகுதிகளுக்கும் செயலாளர்கள் என்றால் அவர்கள் தொகுதி செயலாளர்கள்தானே? மாவட்ட செயலாளர்களாக எப்படி ஆவார்கள்? திருமாவளவன் படித்த தமிழில் தொகுதியும், மாவட்டமும் ஒரே அர்த்தம்தான் போல ? இந்தலட்சணத்தில் தமிழை வாழவைக்க வந்த மாமேதை போல தன்னை நினைத்துக் கொண்டு தமிழ் மாமன்னர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் தமிழைப் பற்றி இவர் குறை கூறுவது?


ராமகிருஷ்ணன்
பிப் 07, 2026 08:49

மாவட்ட செயலர்களை நியமித்து விட்டால் என்னவோ 234 தொகுதியில் எம்எல்ஏ கள் ஜெயித்து விடலாம் என்று தோரணையில் பில்டப் தேவையா


Minimole P C
பிப் 07, 2026 07:36

All posts in the party are by nomination. Not even single post by election. But this cheating fellow talks of democracy.


sankaranarayanan
பிப் 07, 2026 03:34

இவர் மனதிலே என்ன நினைப்பு என்றே தெரியவில்லை 234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமித்திட்டுவிட்டாராம் அங்காங்கே செயலார்களும் நியமித்துவிட்டாராம் இனி வரும் தேர்தலில் ஒரு நபர் கூட வெற்றிபெற்று அசெம்பளிக்கு செல்ல போவதில்லை ஏற்பாடுகளோ பிரமாதம் என்ன ஜோடனை என்னவோ கூட்டணி திமுகவில் இவர் இருக்கிறார் இல்லை தனித்தே 234 தொகுதிகளிலும் தனியாக நின்று ஒருவர் கூட ஜெயக்கப்போவதில்லையா பார்க்கலாம்


Minimole P C
பிப் 07, 2026 07:34

well said.