திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்; இபிஎஸ்
திருச்சி: ''காங்கிரஸ்- திமுகவிற்கு இடையே உட்கட்சி பூசல், கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு டிஎன்பிஎஸ்சியின் நிர்வாகத் திறமையற்ற செயல் தான் காரணம். ஏற்கனவே உதவி ஆய்வாளர் தேர்வு இப்படித்தான் குளறுபடி ஏற்பட்டது. காவல்துறை அதிகாரி அறை தீக்கிரையாக ஆக்கப்பட்டது குறித்து டிஜிபியிடம் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி எதுவும் கொடுக்கவில்லை என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். மாநில அரசுக்குத் தேவையான திட்டங்களைத் தான் கொடுக்க முடியும். அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்களை பெற்றோம். இந்த அரசு முறையாக அணுகாத காரணத்தால் கைநழுவிப் போகிறது. இதற்குக் காரணம் ஸ்டாலின் அரசுதான்.
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோதுகூட தேவையான திட்டங்களைப் பெறமுடியவில்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் சென்னை மெட்ரோ ரயில் பாதை அமைக்க உள்துறை அமைச்சர் நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினார். அப்போதே கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்து சரியான முறையில் திட்ட அறிக்கை தயாரிக்காமல் அவசர கோலத்தில் அனுப்பியதால் மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது. இதெல்லாம் அரசின் அலட்சியம், திறமையில்லாத அரசு என்பதற்கு இதெல்லாம் எடுத்துக்காட்டு.
மூச்சுக்கு 300 முறை இண்டியா கூட்டணி என்று பேசிவிட்டு இன்று வாயைத் திறக்க மறுக்கிறாரே முதல்வர், அதைக் கேள்வி கேட்க மறுக்கிறீர்கள். காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் பூசல் வந்துவிட்டது. கருத்துவேறுபாடுகள் வருகிறது. விரிசல் ஏற்பட்டது உண்மைதானே. இன்றுவரை வெளிப்படையாகப் பேசவில்லையே? என்.டி.ஏ கூட்டணி பொருந்தாக் கூட்டணியா, பொருந்திய கூட்டணியா இல்லையா என்று மக்கள் முடிவு செய்ய வேண்டும், ஸ்டாலின் முடிவு செய்யக்கூடாது. அதிமுகவுடன் யார் யாரெல்லாம் கூட்டணியில் இருந்தார்களோ அவர்களே தான் திமுகவுடன் இருக்கிறார்கள். திமுக கூட்டணியில் தேர்தல் நேரத்தில் எந்தெந்தக் கட்சியெல்லாம் இடம் பெற்றிருந்ததோ அந்தக் கட்சியெல்லாம் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. இது காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவது இயல்பு.
காங்கிரஸ் கட்சியினர் சொல்லும் கருத்துக்கு, திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் பதிலைப் பார்க்கும்போது பிளவு ஏற்படும் போலத்தான் தெரிகிறது. அண்மையில் கனிமொழி டில்லிக்குச் சென்று ராகுலை சந்தித்துப் பேசியும் தீர்வு காணவில்லை. கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சி குழு அமைத்தும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லையே? அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
அதிமுக கூட்டணிக்கு சில கட்சிகள் வரும் என்று சொன்னோம். பாமக, அமமுக வந்துவிட்டது, இன்னும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். வாய்ப்பிருக்கிறது.
ஸ்டாலின் அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் என்ன இருக்கிறது? அவர்கள் கேட்ட கோரிக்கை என்ன? பங்களிப்பு இல்லாத ஓய்வூதிய திட்டம் தான் கேட்டனர். ஸ்டாலின் பங்களிப்பு உள்ள ஓய்வூதிய திட்டத்தைத் தானே அறிவித்திருக்கிறார். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லையே. ஏற்கனவே மத்திய அரசு அறிவித்த ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து அறிவித்துள்ளனர். குழந்தை அழுதால் மிட்டாய் கொடுத்து சரிசெய்வது போல, அரசு ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்ததும் அவர்களை ஏமாற்றி சரிசெய்துள்ளனர். அதற்கு சில சங்கங்கள் துணை போயிருக்கிறது.
நாங்கள் தான் போராட்டத்தை அறிவித்திருக்கிறோமே. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மக்களின் பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்துகிறோம். மாநகராட்சி, நகராட்சிகளில் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் தான் போராட்டம் நடத்துகிறோம்.
திமுக தொடர்ந்து மாநாடுகளை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லையே, தினமும் ஒரு அறிவிப்பு கொடுக்கிறார்கள். எந்தப் பெயராவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பெயர் வைப்பதற்கு நோபல் பரிசு ஸ்டாலினுக்குக் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும். தினம் ஒரு பெயர், போட்டோ ஷூட் அதோடு முடிந்துபோய்விட்டது.
இடைக்கால பட்ஜெட் தான் இது. இதில் எதுவும் வருவதற்கு வாய்ப்பில்லை. ஆட்சியின் கடைசி ஆண்டில் ஒவ்வொரு அரசும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும். இதில் அரசு ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்டவை தான் இடம்பெறும்.
விஜய் ஊழல்வாதி என்பதற்கு அவர் பணம் கட்டாமல் இருப்பதே சாட்சி. நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. எங்கு வெளியில் வந்திருக்கிறார்.? கட்சி தொடங்கினார் அவ்வளவுதான். மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்துவிட்டது, 72 நாட்கள் வீட்டை விட்டே வரவில்லை. ஒரு சம்பவம் நடந்தால் அதை துணிந்து நின்று தீர்வுகாண்பது தான் ஒரு அரசியல் கட்சித் தலைவருடைய பண்பாக இருக்க வேண்டும். ஆனால், துயரம் ஏற்பட்டதும் வெளியிலே வரவில்லை, அலுவலகத்தை மூடிவிட்டனர். கட்சி இருக்கிறதா இல்லையா என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
இந்தியை முதலில் கொண்டுவந்தது காங்கிரஸ், அப்போது கூட்டணியில் இருந்தது திமுக. இப்போது யாருடன் கூட்டணியில் உள்ளனர், காங்கிரஸ். இவர்கள் பேசலாமா? யோக்கியம் இருக்கிறதா? காலத்துக்கு ஏற்றவாறு நடிக்கும் கட்சி திமுக. செல்லாத நோட்டுக்கு பயன் இருக்கிறதா? அதுபோல செங்கோட்டையனை பற்றி பேசி என்ன பயன்? செல்லாத நோட்டுக்கு என்ன வேலியூவோ அதேதான் அவருக்கும்.
Advertisement
உங்க கூட்டணி பத்தி பேசாமல் வேற கூட்டணி கதைகள் எல்லாம் எதற்கு. நமக்கு தான் ஆட்சியில் இருக்கும் போது தமிழ் நாட்டில் என்ன நடந்தது என்பதே தெரியாதே . அரசியலில் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர் தானே .
தமிழக போலீஸ் துறை ரௌடிகல் போல் செயல்படுகிறது section officer எல்லாம் டுபாக்கூர்
அடுத்தவன் வீட்ல என்ன நடக்குதுன்னு அதையே பாத்துட்டு உக்காந்துரு... உன் வீட்டு ஓட்டைய மொத அடைக்க பாரு
அவர்களின் கூட்டணிதான் சில பிரச்சினைகளை சந்திக்கின்றது. அதுவும் கூடிய விரைவில் திமுக சரிபடுத்திவிடும். ஆனால் நீங்கள் உங்கள் கட்சியில் இருந்தவர்களையே விரட்டுகின்ரீர்கள் யாரையும் சேர்க்க மாட்டேங்கிறீர்கள். இது உங்களது வெற்றிக்கு மிகப்பெரிய சரிவையே கொடுக்கும் என்பதை அறியாமல் அடுத்த கட்சியை பற்றி பேச தேவையே இல்லை. கட்சியில் பலரும் வேறு கட்சியில் சேர்ந்துவிட்டார்கள். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பல இடங்களில் மூன்றாவது இடத்தையே பெற்றது என்பதை சவுகரியமாக மறைத்து இதுபோன்ற பேட்டிகளை தவிர்ப்பது நல்லது. உங்களை பெரிதும் நம்பிக்கொண்டுள்ள அமீத்ஷாவுக்குத்தான் பெரிய ஏமாற்றமாக இருக்கப்போகிறது
அதிமுக பிஜேபி , ttv இணைந்து பணியாற்றினால் பந்தயம் நாம் தான் அடிக்கிறோம் , கணிப்புகளும் அவ்வாறே வந்து கொண்டிருக்கின்றன
அதிமுகவுக்கு தனி பெரும்பான்மை என்பதெல்லாம் நடக்காத விஷயம் போகாத ஊருக்கு வழி சொல்லும் இ பி எஸ் . என் டி ஏ கூட்டணி என்று சொல்ல இன்னும் என்ன தயக்கம் ? சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் , திருச்சி , டெல்டா மாவட்டங்களில் அதிமுக மூன்றாம் இடத்தில்தான் இன்னும் உள்ளது...


இவர் சார்ந்திருக்கும் கூட்டணி தேர்தலில் ஒருவேளை வெற்றி பெற்றால் பிறகு நடக்கப் போகும் கூத்துக்கள் மிகவும் வேடிக்கையாக இருக்கப் போகிறது.