'பார்க்கலைனா என்னம்மா? பேசிக்கலாம்... விடு': திணறிய ஜோதிமணி
'ஐந்து ஆண்டுகளுக்கு பின், இப்போது தான் உங்களை பார்க்கிறோம்' என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை பார்த்து பெண் கேள்வி எழுப்பியதால், ஜோதிமணி திணறினார்.
கரூர் லோக்சபா தொகுதி, காங்., --- எம்.பி., ஜோதிமணி, தொகுதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை; சொந்தக் கட்சியிலும், தி.மு.க.,விலும் தேவையில்லாத பகையை தேடிக் கொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. பல்வேறு எதிர்ப்புகளை மீறி, ராகுலின் பரிந்துரையில் அவர் கரூரில் போட்டியிடுகிறார்.
தற்போது தேர்தல் பிரசாரத்தை துவங்கிய நிலையில், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க துவங்கி விட்டனர். கோடங்கிபட்டி ஆதிதிராவிடர் தெருவில் நேற்று ஜோதிமணி பிரசாரம் செய்தார். அப்போது, ஆரத்தி எடுக்க நின்ற பெண் ஒருவர், 'ஐந்து ஆண்டுகளாக உங்களை பார்க்கவில்லை; இப்பொழுது ஓட்டு கேட்க மட்டும் வந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்.
ஜோதிமணி திகைத்து நிற்க, உடனிருந்த தி.மு.க.,வினர், 'அமைதியாக இரும்மா; பேசிக்கலாம்' என, அப்பெண்ணை சமாதானப்படுத்தினர்.
வாசகர் கருத்து