Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


தே.ஜ., கூட்டணியை வீழ்த்த தி.மு.க., 'மாஸ்டர் பிளான்'

தே.ஜ., கூட்டணியை வீழ்த்த தி.மு.க., 'மாஸ்டர் பிளான்'

ஓசூர்: வரும் சட்டசபை தேர்தலில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள 11 சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்ற, தி.மு.க., காய் நகர்த்துகிறது. அதற்காக, உளவுப்பிரிவு போலீசார், களம் இறக்கி விடப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - த.வெ.க., - நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றுக்கு எங்கிருந்து பணம் வருகிறது.

ஏற்கனவே தேர்தலுக்கு பணம் வந்திருந்தால், அதை எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, உளவுப்பிரிவு போலீசார் கடந்த 10 நாட்களாக சேகரித்தனர்; அந்த தகவல்களை மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர்.
அது, தி.மு.க., தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதை வைத்து, எதிர்க்கட்சிகளை அம்மாவட்டங்களில் சாதுர்யமாக வீழ்த்தும் பணியை மேற்கொள்ளவே, தி.மு.க., சார்பில் உளவுத்துறை வாயிலாக இந்த விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலுக்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ம.க., - அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள தி.மு.க., தரப்பில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.

அதனால், உளவுத்துறை வாயிலாக தி.மு.க., மேலிடம் தகவல்களை பெற்றுள்ளது. அதை கொண்டு, ஓட்டுகளில் பெரும் பகுதியை கவர, பல்வேறு பணிகளை தி.மு.க.,வினர் செய்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மார் 05, 2026 01:36 pm

மாநில அரசு தேர்தல் என்ற தேவையில்லாத ஆணியை பிடுங்கி எரிந்து விடலாம் வீண் செலவுகள் மிச்சமாகும் நேரமும் மிச்சமாகும் ஒரே நாடு ஒரே அரசாங்கம் என்பதாக இருந்தால் போதுமானது

Reply Rate this
மார் 05, 2026 01:28 pm

ஸ்டாலினுடைய அரசின் உளவுத்துறையின் லெட்சணம் எப்படி என்று திருப்பூரில் தங்கி வேலைபார்த்த வங்கதேசத்தை சேர்ந்தவர்களை டெல்லி போலீஸ் வந்து அள்ளிக் கொண்டு போன போதே பார்த்தோமே! அப்படி உள்ளவர்கள் கொடுக்கும் உளவு தகவல்கள் எப்படி சரியானதாக இருக்கும்?

Reply Rate this
மார் 05, 2026 10:43 am

தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக கவர்னர் ஆட்சியை அமல்படுத்தனும்.

Reply Rate this
மார் 05, 2026 10:04 am

இந்தியா முழுவதும் காவல் துறையை ஜனாதிபதியின் கீழ் கொண்டு வர வேண்டும். ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் காவல் துறை ஆட்சியாளர்களின் அடிமைத் துறையாக மாறி வருகிறது.

Reply Rate this