Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 தமிழக 'புரமோஷனு'க்கு தே.ஜ., கூட்டணி ஆட்சி

 தமிழக 'புரமோஷனு'க்கு தே.ஜ., கூட்டணி ஆட்சி

தமிழக அரசின் தோல்வியை மறைக்க, தி.மு.க.,வினர் ஹிந்தி எதிர்ப்பை கையில் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், ஹிந்தியை திணித்தவர்களோடு கூட்டணி வைத்து, ஹிந்தி எதிர்ப்பு குறித்து தி.மு.க., பேசுகிறது.
நாங்குனேரி கலவரம் குறித்து தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சியினரும் பேசவில்லை. தமிழகத்தில் உணர்வுப்பூர்வமாக பல பிரச்னைகள் நடக்கின்றன. அது குறித்தெல்லாம் தி.மு.க., கூட்டணியில் இருப்பவர்கள் பேசுவதில்லை.

தமிழகத்தில் தி.மு.க.,வினரால் கலாசார சீரழிவு ஏற்படுகிறது. தமிழக பா.ஜ., தமிழுக்காக பாடுபடுகிறது. தமிழுக்கு எந்த நிந்தனை வந்தாலும், எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. மத்திய அரசும் நிச்சயமாக அப்படி செய்யாது. மற்ற மாநிலத்தைச் சேர்ந்தோரை துன்புறுத்துவது, தமிழ் கலாசாரம் இல்லை.

த.வெ.க., தலைவர் விஜய் பேசியதில், பாதி குழந்தைத்தனமாக இருக்கிறது. இது 'எலெக் ஷன்' அல்ல; 'எமோஷன்' என, விஜய் நேற்று தஞ்சாவூரில் பேசியுள்ளார்.

தமிழகம் 'புரமோஷன்' ஆக வேண்டுமெனில், தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்.

- தமிழிசை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement