மா.செ.,க்களை தனித்தனியாக அழைத்து வீட்டில் பழனிசாமி ரகசிய ஆலோசனை
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தனது இல்லத்தில் நேற்று, மாவட்டச்செயலர்களை தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அ.தி.மு.க., மாவட்டச்செயலர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
அதில், பழனிசாமி பேசியதாவது: தி.மு.க., கூட்டணி வலுவிழந்து விட்டது. தற்போதைய சூழலில், தே.ஜ., கூட்டணி வலுவாக இருக்கிறது. அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை, மக்களிடம் கொண்டு சென்றாலே, நாம் எளிமையாக வெற்றி பெறலாம். எனவே, தெருமுனை கூட்டங்களை நடத்துவதோடு, துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்யுங்கள். அதேபோல், பூத் கமிட்டியை செயல்பாட்டில் வையுங்கள்.
'விடியா ஆட்சி; உங்கள் வீட்டு பில்லே சாட்சி' என்ற நமது பிரசாரம், மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதையும் தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதை் தொடர்ந்து, பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில், மாவட்டச்செயலர்களுடன் பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது, தேர்தலுக்கு ஆகும் மொத்த செலவு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதோடு, மாவட்டச்செயலர்களிடம் இருந்து இறுதி வேட்பாளர் பட்டியலையும் பழனிசாமி வாங்கினார்.
குறிப்பாக, சில மாவட்டச்செயலர்களிடம், தான் தயார் செய்து வைத்துள்ள வேட்பாளர் பட்டியலை கொடுத்து, 'இவர்தான் வேட்பாளர்' என, அறிமுகம் செய்துள்ளார். பழனிசாமியின் இந்த செயலால், பல மாவட்டச்செயலர்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்