காங்கிரஸ் பழைய முகங்களை ஓரங்கட்டிய புதுமுகம் : யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?
புதுடில்லி: ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியில், திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக்,54, போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தமிழகம் உட்பட 5 மாநில ராஜ்யசபா வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது.
ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள். இன்றைக்குள் தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்களை தேர்தல் கமிஷன் நாளை பரிசீலிக்கிறது. இந்நிலையில் தமிழகம் உட்பட 5 மாநில ராஜ்யசபா வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது.
யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?
* தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு கிறிஸ்டோபர் திலக் செல்கிறார். திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்து வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.
* கட்சியின் தொண்டராக பணியை தொடங்கிய கிறிஸ்டோபர் திலக் தேசிய அளவில் உயர்ந்து இருக்கிறார். இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழுவில் இடம்பெற்று இருந்தார்.
* மத அமைப்புகள், தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இளைஞர் காங்கிரஸ் தேர்தலை நடத்தியுள்ளார். நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காங்கிரஸ் பணியாற்றியுள்ளார்.
கல்வித்தகுதி
திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியிலும், தியாகராஜர் நிர்வாகவியல் பள்ளியிலும் பட்டம் பெற்றுள்ளார். டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் சமூக பாதுகாப்பு என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்திருக்கிறார். டாமி ஹில்பிகர் நிறுவனத்தில் பணியாற்றியும் இருக்கிறார்.
வாய்ப்பு கிடைத்தது எப்படி?
* திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் என பலரும் பலரும் போட்டியிட்டனர். ம.பி. மாநிலத்தில் ஒரு முறை எம்.பியாக இருந்த மீனாட்சி நடராஜனுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
* ஆனால் அனைவரையும் ஓரம் கட்டி கட்டிவிட்டு புதுமுகமான கிறிஸ்டோபருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதற்கு சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர் அதுவும், தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதே பிரதான காரணம் என்கின்றனர் கட்சியினர்.
* காங்கிரஸ் தலைவர் கார்கே தான் இவரை வடகிழக்கு மாநில பொறுப்பாளராக நியமித்துள்ளார். ராகுல் நடத்திய யாத்திரைகளிலும் இவர் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார். அந்த அந்த வகையில் கார்கே, ராகுல் இருவரிடமும் இவருக்கு நல்ல அறிமுகம் உள்ளது. கூடவே கிறிஸ்தவர் என்பதும் சேர்ந்து கொண்டதால் இவருக்கு எம்.பி. பதவி எளிதில் கிடைத்துள்ளது.
மேலும் 4 மாநில வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
* தெலங்கானா- அபிஷேக் மனு சிங்வி, வேம் நரேந்தர் ரெட்டி.
* சத்தீஸ்கர்- பூலோ தேவி நேதம்
* ஹரியாணா - கரம்வீர் சிங் பவுத்,
* ஹிமாச்சல பிரதசேம்- அனுராக் சர்மா
ஆகியோரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
காங்கிரஸ் திமுக கட்சிகளில் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு ராஜ்யசபாவில் பதவி இல்லை.
காங்கிரஸ் கட்சி சோனியா காந்தி வந்த பின் கிறித்துவமயமாக மாறி வருகிறது. கிறித்துவர்களுக்கு தான் முக்கியத்துவம், பதவிகள் சுலபமாக கிடைக்கின்றன. ஆனால் இஸ்லாமியர்களுக்கு இந்த சுலப பாதை இல்லை.
இவர் முதலில் இந்துவாக இருந்திருந்தால் பட்டியிலின தகுதியை பெற்று தேர்தலில் தகுதியானவராக இருக்கலாம் போட்டியிடலாம் ஆனால் இவர் கிருஸ்துவ மதத்திற்கு மாறியவர் என்றிருந்தால் அது சரி ஆகுமா என்பதை உச்ச நீதி மன்றம்தான் உறுதி செய்ய வேண்டும் இறகு ஒரு சர்ச்சையைத்தான் கிளப்பும்
உண்மையான தலித் உடைய இன்னல்கள் ஒன்னும் தெரியாது. ஆனால் இட ஒதுக்கீடு மட்டும் சொலையா கிடைக்கும். காங் திமுகவுக்கு ஏத்த ஆளுதான்.
ஆஹா இவரின் பின்புலம் மெய் சிலிர்க்க வைக்கிறது...அப்போ மெரிட் என்பது இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இதுவே...இதுவல்லவா ஈர வெங்காய மண்...
அண்ணாமலை போல் விவரம் பல சீனியர்களை தாண்டி பதவியைப் பெற்று விட்டார் என்று போடலாமா
மதம் மாறிய பிறகு எப்புடி தலித் என்று சொல்றிங்க illegal பாவாடை என்று அன்டோனியா கொடுத்து இருக்கார்

மிஷனெரி ரெகமெண்டஷன்