Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


ஓட்டு வங்கியை விஜய் நிரூபிக்கட்டும்: ராகுலை சமாதானப்படுத்திய கார்கே

ஓட்டு வங்கியை விஜய் நிரூபிக்கட்டும்: ராகுலை சமாதானப்படுத்திய கார்கே

சென்னை: 'த.வெ.க., தன் ஓட்டு வங்கியை நிரூபிக்கட்டும்; விஜய்க்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தால், அடுத்து வரும் தேர்தலில் கூட்டணி வைக்கலாம்' என கூறி, காங்., - எம்.பி., ராகுலை, அக்கட்சியின் தலைவர் கார்கே சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில், 2016ல் போட்டியிட்டது போல் 41 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் தர வேண்டும் என காங்கிரஸ் பிடிவாதமாக இருந்ததால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்தது.

காங்கிரசின் கோரிக்கைகளை நிராகரித்த முதல்வர் ஸ்டாலின், 'ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு சரிப்பட்டு வராது' என்றார். அது மட்டுமல்லாது, 'தமிழகத்தில் காங்கிரசுக்கு எந்த கட்டமைப்பும் இல்லை. எனவே, அக்கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால், அ.தி.மு.க., கூட்டணியின் வெற்றிக்கு வழி வகுத்துவிடும்' எனவும் தி.மு.க.,வினர் பேசி வந்தனர்.
இதனால் கோபமடைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். 'கடந்த 22 ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், காங்கிரசுக்கு எந்த பலனும் இல்லை.
'த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்தால் இளைஞர்களின் ஆதரவை பெற முடியும்; காங்கிரசை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்' என ராகுல் கூறியுள்ளார்.

அதை தொடர்ந்தே, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், எம்.பி., மாணிக்கம் தாகூர், காங்கிரசின் தரவு மற்றும் பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர், தி.மு.க.,வை சீண்டும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், மூத்த தலைவர் சிதம்பரம் வழியாக காங்., தலைவர் கார்கேவிடம் தி.மு.க., பேச்சு நடத்தியது. பின்னர் ராகுலிடம் பேசிய கார்கே, 'வரும் தேர்தலில் த.வெ.க., தன் ஓட்டு வங்கியை நிரூபிக்கட்டும்; அதன் பின், அடுத்து வரும் தேர்தல்களில் அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து யோசிக்கலாம்.

'தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், 22 ஆண்டு கால கூட்டணியை முறிப்பது, காங்கிரஸ் மீதான நம்பகத்தன்மையை குறைத்து விடும். 'பார்லிமென்டில் மோடி அரசை எதிர்கொள்ள, தி.மு.க.,வின் எம்.பி.,க்கள் பலமும் நமக்கு தேவை' என கூறி சமாதானப்படுத்தி உள்ளார். அதை தொடர்ந்தே, தி.மு.க., காங்கிரஸ் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக, காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மார் 05, 2026 08:15 pm

கார்கே அரசியல் அனுபவம் மிக்க தலைவர் என்று நிரூபித்து விட்டார்!

Reply Rate this
மார் 05, 2026 07:13 pm

ஓட்டு வங்கியை நிரூபித்த பிறகு.... கான் கிராஸ் கட்சியை யாரும் சீண்ட மாட்டார்கள்.... மூழ்கிக் கொண்டு இருக்கும் கப்பலான கான் கிராஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க நினைத்த TVK கட்சியை என்னவென்று சொல்ல ?

Reply Rate this
மார் 05, 2026 02:14 pm

காங்கிரஸிடம் கூட்டணி இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சி உடைக்கப்படும். காங்கிரஸில் பல அந்தமாதிரி நம்பிக்கையான தலைவர்கள் உள்ள கட்சி.

அதே நேரத்தில் தனது நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. அது ஒரு மெஜாரிட்டி மக்களுக்கு எதிரான மற்றும் தீவிரவாத, மதவாத ஆதரவு கட்சி என்ற கருத்து பலப்படுகிறது.

Reply Rate this
மார் 05, 2026 01:53 pm

காங்கிரஸ் கட்சி இப்படித்தான் ஒன்றுமில்லாத பாஜகவை ஊதி ஊதிப் பெரிதாக்கி அவர்களை நிஜமாகவே பெரிய கட்சியாக வளர விட்டு விட்டார்கள்!

Reply Rate this
, கோவாலு இப்பதான் ஒழுங்கா பதிவு செய்து இருக்கார்.
மார் 05, 2026 05:34 pm
Rate this
மார் 05, 2026 01:19 pm

திராவிஷக்கட்சிக்கும், கான்-கிராஸ் க்கும் வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகள் கான்-கிராஸ் க்கு ஒதுக்கப்பட்டு, கான்-cross முற்றிலும் அழிக்கப்படும்.. தற்குறி வேட்பாளர்கள் திராவிஷத்தால் விலைக்கு வாங்கப்படுவர்...

Reply Rate this
மார் 05, 2026 12:36 pm

முதல், வீட்டில் உள்ள மனைவிக்கே பாதுகாப்பு கொடுக்காத விஜய், பெண்கள் பாதுகாப்பை பேசி வருகிறார் என விமர்சனம் எழுந்தது. இதனால்தான் இந்த முறை விஜய் , பெண்கள் பாதுகாப்பு குறித்து செங்கிப்பட்டியில் பேசவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Reply Rate this
மார் 05, 2026 12:18 pm

என்னமோ காங்கிரஸுக்கு 20-30 பெர்ஸன்ட் வோட்டு இருக்குது மாதிரி, விஜய் நிரூபிக்கட்டுமா, அவர் தனியாக நின்று more than 15 பெர்ஸன்ட் வாங்க போறார். காங்கிரஸ் கொத்தடிமை திருட்டு திமுகவுக்கு.

Reply Rate this
அதே தான் பீசப்பிக்கு 3% வோட்டு வெச்சிக்கொண்டு என்ன ஒன்றியத்தில் ஆட்சி அந்த மிரட்டல் வேறு என்ன இருக்கு நேற்று வேறு ஹிந்தி திணிப்பு இருக்கும் 3 % உம குறைந்து 2 % ஆகாமல் இருந்தால் சரி
மார் 05, 2026 12:38 pm
Rate this
மார் 05, 2026 11:36 am

ஒரு தமிழ் ஆளு வரட்டும் தளபதி பெரிய ஆளாக வரட்டும் நம்ப பய்யன் சார் அவன்

Reply Rate this
எது, தமிழ் ஆளா? சார், இவரும் பாதி தெலுங்கு, என்ன தமிழ் ஆள்?
மார் 05, 2026 12:33 pm
Rate this
மார் 05, 2026 11:36 am

ஆனால் தனது ஓட்டுவங்கியை (ஒன்றேகால் சதவீதம்) நிரூபிக்க வேண்டிய அவசியம் நேரு குடும்பத்திற்கு இல்லை

Reply Rate this
மார் 05, 2026 11:34 am

ராகுல் காந்தி கட்சியை valakkura மாரி தெரில

Reply Rate this