வள்ளலாரை ஈ.வெ.ரா.,வுடன் ஒப்பிடுவதா?
அனைத்து உலக வள்ளலார் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வள்ளலாரின் திருமுறை பாடல்களை, கடந்த 1940ல், ஈ.வெ.ரா., வெளியிட்டதாக பொய் தகவலை கூறுகிறார். தன் வாழ்நாள் முழுதும் நாத்திகம் பேசி , சன்மார்க்க ஜீவகாருண்ய கொள்கையை கிண்டல் செய்தவர், ஈ.வெ.ராமசாமி. 'ஜீவகாருண்யம் என்ற பெயரில், மாமிசம் உண்பதை வள்ளலார் எதிர்க்கிறார்; அன்னதானம் செய்து பிச்சைக்காரர்களை, சோம்பேறிகளை உருவாக்குகிறார்' என்று துாற்றியவர்கள் திராவிட இயக்கத்தினர். கிருபானந்த வாரியார், வடலுாரில் திருப்பணிகள் செய்த போது, அவருக்கு எதிராகவும் செயல்பட்டவர்கள் தி.மு.க.,வினர். வள்ளலாரை, ஈ.வெ.ரா.,வுடன் ஒப்பிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சி, கருகி ஒழியும்.
- அர்ஜுன் சம்பத், தலைவர், ஹிந்து மக்கள் கட்சி
Advertisement
வள்ளலாரின் ஆன்மா அழிய வில்லை அது பொய்யர்களை அடையாளம் காட்டும். தீ யிடம் விளையாட முடியாது சார் .
திராவிடக் கண்மணிகளுக்கு வள்ளலாரைப்பற்றியும் தெரியாது, பெரியார் என்று சொல்லும் ஈ வே ராமசாமி நாயக்கரைப்பற்றியும் தெரியாது. ஏதோ வாய்க்கு வந்தபடி சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி பச்சோந்தியாக மாறி உளறிக்கொட்டி ஏமாற்றிக்கொண்டிருப்பதே இவர்கள் தொழில். தெரிந்தும் ஏமாறிக்கொண்டிருக்கும் வாக்காளர்களின் தலைவிதி.
எங்க தாத்தா வள்ளலாரின், சிஷ்யன் கோணி சாமியாரின் நேரடி சிஷ்யராக இருந்தார், எங்க வீட்டில் பெரியார் மீட்டிங் போடுவார் எங்க அம்மா கூறி உள்ளார்.. எங்க தாத்தா வள்ளலாரின் தீவிர பக்தர் அனாலும் பெரியாரை ஆதரித்து வந்தார் .. ...பெரும்பான்மையான் ஆன்மீகவாதிகள் பெரியார் மீது மரியாதையை கொண்டு ullanar...
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்றுபாடிய திருவள்ளுவர் நெற்றியில் உள்ள விபூதியை சிவநாமத்தை அழித்தார்கள், திருமுறைகள் பாடிய வள்ளலாரின் நெற்றியில் வீபூதியை- சிவநாமத்தை அழிக்கிறார்கள்.. திரு குன்று நீதீயை மதிக்காதவர்கள்...ஓட்டுக்காக மொழி, இனம், கலாசாரம், பண்பாடு எல்லாவற்றையும் மாற்ற துனிந்துள்ளார்கள், மக்கள் இம்முறை சரியான பாடம் கற்பிப்பார்கள்....
வள்ளலார் என்றால் நெற்றி நிறைய திருநீறுதான் நம் கண்களின் படும். அதை இந்த திருட்டு திராவிடம் முழுவதும் நீக்கி அவருடைய தவறான படத்தை வெளியிடுகிறது . இதை வள்ளலாரின் பக்தர்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் ?
ஸ்டாலினுக்கு எழுதிக்கொடுப்பவர்கள் வேண்டுமென்றே தவறு செய்கிறார்களோ? எப்படி இருந்தாலும் ஸ்டாலின் என்றால் புளுகு தான். இந்த ஆசாமி அடித்துவிடும் புளுகுகளை எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டு வெளியிடவேண்டும். .
வள்ளலாரின் தம்பிதான் ஈ.வே.ரா. என்றுகூட இந்த திராவிட மாடல் அரசுமுதல்வர் சொன்னாலும் வியப்பில்லை ஏனென்றால் அவருக்கு தெறிந்தது ஒன்றே ஒன்றுதான் அது ஈவேரா அதுவும் வீரமணியின் போதனையால் அண்ணாவை அமுக்கியாகிவிட்டது இது அப்பனின் யோஜனை வீரமணியின் கர்ஜனை

தேர்தல் காலம். அதனால் பரவாயில்லை என்று வள்ளலாரை இழுத்துக்கொள்கிறார்கள்.