Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியீடு

 இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியீடு

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், நாளை வெளியிட இருந்த நிலையில், வரும் 23ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு, ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு, மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம்.

திருத்தப்பணி சட்டசபை தேர்தலையொட்டி, மாநிலம் முழு தும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக, கடந்த டிச., 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதற்கு முன், வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடந்தது. இப்பணியின் போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் ஓட்டு உள்ள வாக்காளர்கள், இறந்தவர்கள் என, 97 லட்சம் வாக்காளர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

வரைவு வாக்காளர் பட் டியல் வெளியான பின், விடுபட்டவர்கள் தங்கள் பெயரை சேர்க்க, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, கடந்த ஜன., 30 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பெயர் சேர்க்கக்கோரி 22.83 லட்சம்; பெயர் நீக்கக்கோரி 2 லட்சம்; திருத்தம் கோரி 9.90 லட்சம் என மொத்தம், 34.76 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இவற்றை ஆய்வு செய்து, தகுதியான நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகாது; வரும் 23ம் தேதி வெளியாகும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:

உச்ச நீதிமன்றம் சில வழக்குகளில், சிறப்பு வாக் காளர் பட்டியல் திருத்தப் பணியில், 'முரண்பாடுகள்' என்ற பிரிவில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர் பட்டியலை, ஊராட்சி அலுவலகங்கள், பொது இடங்கள், தாலுகா மற்றும் துணை பிரிவு அலுவலகங்கள், நகரப் பகுதிகளில் வார்டு அலுவலகங்கள் போன்றவற்றில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

மறுப்புரை முரண்பாடுகள் பிரிவில் இடம் பெற்று பாதிக்கப்படும் நபர்கள், பட்டியல் வெளியாகும் நாளில் இருந்து 10 நாட்களுக்குள், தொடர்புடைய நபர்கள் தங்கள் ஆவணங்களை, மறுப்புரைகளை சமர்ப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2026 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக வைத்து நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல், 23ம் தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement

பிப் 16, 2026 05:12 am

சீக்கிரம் ஆகட்டும். அப்பொழுதுதான் பாஜக வின் புரிந்துணர்வுக் கூட்டணிக் கட்சியான திமுக பணப்பட்டுவாடாவை சிறப்பாக செய்ய முடியும். தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து நலத்திட்டங்களையும் அறிவிக்கும் திமுக வை கண்டு கொள்ளாத தேர்தல் ஆணையத்துக்கு ஒரு ராயல் சல்யூட்.

Reply Rate this