/ செய்திகள் /  விஜய் கூட்டத்துக்கு 420 தொண்டர் படை பாதுகாப்பு

 விஜய் கூட்டத்துக்கு 420 தொண்டர் படை பாதுகாப்பு

சேலம்: சேலத்தில், வரும் 13ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்கும் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து, கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக, அக்கட்சியின் 420 பேர் அடங்கிய தொண்டர் படைக்கு, சேலத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இது குறித்து, சேலம் மத்திய மாவட்ட த.வெ.க., செயலர் பார்த்திபன் கூறியதாவது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சிவகுமார், தொண்டர் படைக்கு பயிற்சி கொடுத்துள்ளார். கூட்டம் நடக்கும் இடத்தின் அருகே உள்ள மலைக்கு யாரும் போகாமல் தடுப்பது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதை தடுப்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. தற்போது, நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு மேடை அமைக்கவில்லை; பிரசார வாகனத்தில் இருந்தபடி விஜய் பேசுவார். பாதுகாப்பு பணிகளை, 420 பேர் கொண்ட தொண்டர் படையினர் மேற்கொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !