/ செய்திகள் / வரும் 17ம் தேதிக்குள் கூட்டணி முடிவு: பிரேமலதா இறுதி நம்பிக்கை

வரும் 17ம் தேதிக்குள் கூட்டணி முடிவு: பிரேமலதா இறுதி நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தே.மு.தி.க., யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற அறிவிப்பு, 17 ம் தேதிக்குள் முறைப்படி வெளியிடப்படும்'' என, அக்கட்சி பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.தே.மு.தி.க., சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனு பெறும் பணி துவங்கியது. கோயம்பேடில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், விருப்ப மனு வினியோகத்தை துவக்கி வைத்து, பிரேமலதா கூறியதாவது: தே.மு.தி.க., சார்பில் 234 தொகுதிகளிலும், போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், 12ம் தேதி வரை, விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன. தே.மு.தி.க., கூட்டணியை அறிவிப்பதில், எந்த காலதாமதமும் இல்லை. தே.மு.தி.க., இடம்பெறும் கூட்டணி, இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றியை பெறும். யூகமான கேள்விகளுக்கு, நான் பதில் அளிப்பது கிடையாது.வரும் 17 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை, இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது. அதற்குள் தே.மு.தி.க., கூட்டணி அறிவிப்பை முறைப்படி வெளியிடுவோம். யாருடன் கூட்டணி பேசுகிறோம் என்பதை சொல்ல முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

V Venkatachalam, Chennai-87
பிப் 07, 2026 14:01

கேப்டன் அண்ணியாரே தேர்தல் தேதி அறிவுக்குற வரைக்கும் கூட்டணி பபேசலாம். விரலுக்கு தகுந்த வீக்கம் இருக்கணும்.‌ நீங்க இரண்டு பக்கமும் பேசினால் எந்த விரலுக்கும் மோதிரம் கிடைக்காதுன்னேன்..


gopi
பிப் 07, 2026 13:28

இது போன்ற ஒரு கேடுகெட்ட அரசியல் கட்சியை தமிழகம் இதுவரை சந்தித்தது இல்லை


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 07, 2026 12:05

அட்வான்ஸ் ஒப்பந்த பத்திரம் எல்லாம் வாங்க முடியாது. நேரடியாக கிரையம் செய்பவருக்கு மட்டுமே நிலம் விற்பனைக்கு.


angbu ganesh
பிப் 07, 2026 10:06

2026 17-ன் தேதியா இல்ல 2027 ஆ


vbs manian
பிப் 07, 2026 09:01

புலி வருகிறது புலி வருகிறது.


K RAGHAVAN
பிப் 07, 2026 08:27

ONLY IN 2027 FEB17


Minimole P C
பிப் 07, 2026 07:57

This lady spoiling the image of Vijayakant.


adalarasan
பிப் 07, 2026 07:13

இப்படியே பேனல் தேர்தலே முடிந்துவிடும் போல் உள்ளது.


காந்தன்
பிப் 07, 2026 05:28

நீங்களும் 2047 க்குள்ளாற கூட்டணி வெச்சு முடிச்சிருவோம்னு உருட்டலாமே.


தாமரை மலர்கிறது
பிப் 07, 2026 00:08

இதென்ன பெரிய சிதம்பர ரகசியம்? யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் தேமுதிக என்ற சொப்பணசுந்தரி சொந்தம். எடப்பாடி நூறு கோடி கொடுத்து, ஸ்டாலின் நூறுகோடியே ஒரு ரூபாய் கொடுத்தால், ஸ்டாலினுக்குத்தான் தேமுதிக. எல்லோருக்கும் வெற்றி தேர்தல் ரிசல்ட் வந்தபின்னர் தான். தேர்தலுக்கு முன்னரே ஜெயிப்பதில் பிரேமலதா கில்லாடி.


angbu ganesh
பிப் 07, 2026 10:07

ஆமா இவங்களுக்கு தொகுதியம் கொடுத்து பணத்தையும் கொடுப்பங்களா என்ன