/ செய்திகள் /  அ.தி.மு.க., மவுனம் ஏன்? இந்திய கம்யூ., கேள்வி

 அ.தி.மு.க., மவுனம் ஏன்? இந்திய கம்யூ., கேள்வி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் வீரபாண்டியன் அறிக்கை: மதுரை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியும், தே.ஜ., கூட்டணி கட்சித் தலைவர்களும் பேசிய பேச்சுக்களில், முரண்பாடுகளும், வாய் சவடால்களும் நிரம்பி வழிந்தன. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி என பழனிசாமியும், அவரது கட்சியினரும் பேசி வருகின்றனர். பழனிசாமி அக்கூட்டத்தில், 'அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்' என்றார். அதற்கு மாறாக பிரதமர் மோடி, 'தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு அமையும்' என பேசினார். கூட்டணி பெயர் குறித்தும், யார் ஆட்சி அமைப்பர் என்பது குறித்தும், அக்கட்சிகளிடையே உள்ள முரண்பாட்டை இது வெளிப்படுத்துகிறது. தே.ஜ., கூட்டணி அரசு அமையும் என பிரதமர் மோடி பேசியது குறித்து, அ.தி.மு.க.,வினர் வாய் மூடி மவுனிகளாக இருப்பது ஏன்? மொத்தத்தில் மதுரை தேர்தல் பிரசாரக் கூட்டம், பொய்யும் கற்பனையும் நிறைந்த வெற்று முழக்கங்களே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்