Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 அதிகாரிகளை பகடைக்காய் ஆக்கிய தி.மு.க., அரசு: அ.தி.மு.க., கண்டனம்

 அதிகாரிகளை பகடைக்காய் ஆக்கிய தி.மு.க., அரசு: அ.தி.மு.க., கண்டனம்

சென்னை: அ.தி.மு.க., நேற்று வெளியிட்ட அறிக்கை:

திருப்பரங்குன்றம் தீபத் துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவை, தி.மு.க., அரசு செயல்படுத்தவில்லை.

இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிமன்றத்தில், மதுரை கலெக்டர் பொது மன்னிப்பு கோரியுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றாமல், வேண்டுமென்றே தி.மு.க., குழப்ப அரசியல் செய்தது. அரசியல் சுயலாபத்திற்காக, தமிழகத்தின் மத நல்லிணக்கத்தை சிதைக்க, தி.மு.க., துணிந்து விட்டது. தன் அற்ப அரசியலுக்கு, அதிகாரிகளை பகடைக்காய் ஆக்கியிருப்பது வெட்கக்கேடானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement