/ செய்திகள் / தி.மு.க., கூட்டணி வேண்டாம்: ம.தி.மு.க., நிர்வாகி வலியுறுத்தல்

தி.மு.க., கூட்டணி வேண்டாம்: ம.தி.மு.க., நிர்வாகி வலியுறுத்தல்

சென்னை : 'தொகுதிகளை குறைத்து கொடுத்தால், தி.மு.க., கூட்டணி வேண்டாம்' என, ம.தி.மு.க., சேலம் மத்திய மாவட்ட பொருளாளர் மணிகண்டன், சமூக வலைதளம் வழியே வலியுறுத்தி உள்ளார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க., ஆறு தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் அரியலுார், மதுரை தெற்கு, வாசுதேவநல்லுார், சாத்துார் ஆகிய தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. வரும் சட்டசபை தேர்தலில், 12 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா 'சீட்' ம.தி.மு.க., தரப்பில், தி.மு.க., கூட்டணியில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க., தரப்பில், ராஜ்யசபா 'சீட்' கிடையாது; சட்டசபை தொகுதிகள் நான்கு தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அதிருப்தி அடைந்துள்ளார். இந்நிலையில், ம.தி.மு.க., சேலம் மத்திய மாவட்ட பொருளாளர் மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை: புதிதாக தி.மு.க., கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க., - ம.நீ.ம., போன்ற கட்சிகளுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியை கொடுத்தனர். ம.தி.மு.க.,விற்கு கைவிரித்து விட்டனர். கடந்த முறை போட்டியிட்ட, ஆறு சட்டசபைத் தொகுதிகளிலிருந்து குறைத்து, மூன்று அல்லது நான்கு தொகுதி என்கிற அளவில் சுருக்கி, ம.தி.மு.க., என்ற கட்சியை அழிக்கும் வேலையை தி.மு.க., செய்கிறது. வைகோ தி.மு.க.,வோடு கூட்டணி வைத்ததன் காரணமாகத்தான், தொடர் தோல்வியில் இருந்த தி.மு.க., தப்பியது. அதை தி.மு.க., மறந்து விட்டது. ம.தி.மு.க., என்ற கட்சி செயல்படுவதை, தி.மு.க., விரும்பவில்லை. எனவே, தி.மு.க., கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க., வெளியேற வேண்டும் என்பதே, உண்மையான ம.தி.மு.க., தொண்டர்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Anonymous
மார் 04, 2026 11:38

என்ன ஆனாலும் இவரை சேர்த்துராதீங்க, பயங்கர ........ ஆளு.


Vel
மார் 04, 2026 11:16

யாருப்பா அங்கே . எதுக்கும் 100 ADMK கொடி 20 ADMK துண்டு தனியா பெட்டிக்குள் வச்சிரு


Saran
மார் 04, 2026 11:04

Joker


VENKATASUBRAMANIAN
மார் 04, 2026 09:56

வெட்கம் மானம் சூடு சுரணை எதுவும் கிடையாது. கொடுத்ததை வாங்கி கொண்டு வந்த அடிமையாகவே இருக்க வேண்டியதுதான்.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 04, 2026 09:21

மதிமுக என்ற கட்சியே திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்டதுதானே. ஆகவே திமுக எதிரியின் சிறகுகளை வெட்டுவது நியாயம்தான்


Sun
மார் 04, 2026 08:43

வை.கோ, திருமா இருவருமே தி.மு.க வே கூட்டணியை விட்டு வெளியேற்றினாலும் கூட இவர்கள் வெளியேற மாட்டார்கள். அப்பவும் எப்படியாவது ஸ்டாலினை சமாதானப் படுத்தி விடலாம் என அறிவாலய வாசலில்தான் காத்துக் கிடப்பார்கள்!


ஆதிநாராயணன்
மார் 04, 2026 08:31

கொத்தடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டு இப்போது என்ன வீராப்பு


SIVA
மார் 04, 2026 08:26

இன்றைய நிலையில் மதிமுக அதிமுக அணிக்கு சென்றால் 10+1 கிடைக்க வாய்ப்பு உள்ளது , அதை மதிமுக பயன்படுத்தி கட்சியின் அங்கீகாரத்தை பெறலாம் ....


இந்து
மார் 04, 2026 08:24

அதெப்படி? தலைவனுக்கும் அவன் வாரிசுக்கு ம் ... போட்டால்தானே கூட்டணி ஏற்படும்.


SUBBU,MADURAI
மார் 04, 2026 07:58

இந்த மதிமுககாரனுகளோட ரோஷத்துக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை. திமுக கூட்டணி வேணாம்னா வைகோவிற்கும் அவரது மகனுக்கும் வேற போக்கிடம் ஏது?