/ செய்திகள் /  பன்னீர்செல்வம் வீட்டில் இரட்டை இலை அகற்றம்

 பன்னீர்செல்வம் வீட்டில் இரட்டை இலை அகற்றம்

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீடு உள்ளது. வீட்டின் கதவில் இரு புறமும் இரட்டை இலை சின்னம் இருந்தது. வீட்டுச் சுவரில் அ.தி.மு.க., கொடியின் வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது. அவர் தி.மு.க.,வில் இணைந்ததை அடுத்து, வீட்டுக் கதவில் இருந்த இரட்டை இலை சின்னம், 'வெல்டிங்' இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது. இது போல, வீட்டுச் சுவரில், தி.மு.க., கொடியின் வண்ணம் பூசப்பட்டது. வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் அ.தி.மு.க., கொடி அகற்றப்பட்டு, தி.மு.க., கொடி பொருத்தப்பட்டது. இதற்கிடையே, தேனி மாவட்டம் போடியில் உள்ள அவரது அலுவலகத்தில், சுவரில் மாட்டப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் படங்கள் நேற்று முன்தினம் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Tetra
மார் 03, 2026 04:36

அருவருப்பான அரசியல்


senthilanandsankaran
மார் 02, 2026 23:17

தமிழன் என்று நம்மை சொல்லவே வெட்கமாய் உள்ளது. இவர் போன்ற ஆட்களால்.


HoneyBee
மார் 02, 2026 21:45

இத்தனை வருடங்கள் பொய் சொல்லி ஸ்டிக்கர் ஒட்டினீகளா


Narasimman Lakshminarasimhan
மார் 02, 2026 14:41

கதவில் உள்ள சின்னத்தை ஏன் அழிக்கணும். பேசாம வேற கதவு போடவேண்டியதுதானே? ஒரு வேளை வேற கதவு போட காசு இல்லையோ? இல்ல எதுக்கு அந்த கதவை வீண் ஆக்கவேண்டும் என்ற எண்ணமோ ?


Murugesan
மார் 02, 2026 13:12

கேவலமான மனிதன்


Raj
மார் 02, 2026 11:26

ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. .. கட்சி மாறியதால் காட்சி மாறியது. ..... நாளை தவெகவிற்கு மாறினால் விசில் அடித்து கொண்டு தெருவில் நடப்பார். ஸ்டாலினை வைப்பார் நாளை விஜயை வைப்பார்.


stb
மார் 02, 2026 06:49

மிகச்சிறந்த அறிவிலி