ஒரு குடும்ப ஆட்சியை துாக்கி எறிய வேண்டும்; அண்ணாமலை பேச்சு
மதுரை: ''தமிழகத்தில் செயல்படும் ஒரு குடும்ப ஆட்சியை துாக்கி எறிய வேண்டும்'' என மதுரையில் நேற்று நடந்த தே.ஜ., கூட்டணி பொதுக்கூட்டத்தில் பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
அவர் பேசியதாவது: மதுரையில் இது திருப்புமுனை கூட்டமாக, தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் கூட்டமாக அமையும். சிறந்த ஆட்சி என்பது ஒரு கை மாநில அரசு, ஒரு கை மத்திய அரசாக இருந்து இரு கைகள் தட்ட வேண்டும். இரண்டு அரசு இணக்கமாக இருந்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மத்தியில் பா.ஜ., மாநிலத்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லுாரிகளை பழனிசாமி கொடுத்தார். இதுவே இணக்கமான ஆட்சிக்கு சாட்சி. தற்போது தி.மு.க., என்றால் மக்கள் தீயசக்தி என்கின்றனர். அனைத்து தரப்பினரும் கோபத்தில் உள்ளனர். 5 ஆண்டு காலத்தில் 11 சதவீதம் வளர்ச்சி அடைந்து விட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். குறிப்பாக மின்னணு துறையில் ரூ.8,800 கோடியாக இருந்த ஏற்றுமதி தற்போது ரூ.ஒரு லட்சம் கோடியை தாண்டியது.
இது மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்து ஊக்குவிக்கும் திட்டத்தால் சாத்தியம். ஆட்டோமொபைல் துறையும் அப்படி தான். தி.மு.க.,வால் மட்டுமே நடந்துள்ளது என கண்ணாமூச்சி காட்டக் கூடாது. தமிழகத்தின் 5 ஆண்டு ஆட்சியில் தி.மு.க., குடும்பம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. ஒரு கம்பெனி போல இயங்கும் அதில், எம்.டி.,யாக முதல்வர் ஸ்டாலின், சி.இ.ஓ.,வாக துணை முதல்வர் உதயநிதி, சீப் மார்க்கெட்டிங் ஆபீசராக கனிமொழி, இயக்குநர்களாக உறவினர்கள், சீப் செக்யூரிட்டி ஆபீசராக ஆர்.எஸ்.பாரதி என அவர்கள் மட்டுமே லாபமடைந்துள்ளனர்.
கிழக்கு இந்திய கம்பெனி எப்படி இந்தியாவில் கலெக்ஷன், கரப்பஷன், கமிஷன் ஆட்சி செய்ததோ அதே கொள்கையுடன் தற்போது தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடக்கிறது. ஒரு டி.என்.பி.எஸ்.சி., தேர்வை கூட நடத்த முடியாத ஆட்சியாக உள்ளது. இக்குடும்ப ஆட்சியை துாக்கி எறிய வேண்டும். தமிழகத்தில் இரண்டு கைகள் சேர்ந்து ஓசை எழுப்பும் இணக்கமான ஆட்சி ஏற்பட வேண்டும். தே.ஜ., கூட்டணி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு பேசினார்.
Advertisement
நீங்கள் சொல்லும் அனைவரும், மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க பட்டவர்கள். வாரிசு அடிப்படையில் யாரும் வரவில்லை.. மக்களை கேவலப்படுத்துவது உங்கள் பொழுதுபோக்கு.
என்னத்தையாவது சொல்லீ நாங்களும் கோட்டையில் குடியேற வேண்டும். பொது மக்களே அந்த ஆசையை நிறைவேற்றுங்கள்
அப்போ பூக்காரி மீன்காரன் தெருவில கடை போட்டிருக்கவன் காலேஜ் ல படிப்பை தவிர மத்ததை பண்ணிக்கொண்டிருக்கும் அரட்டை மாணவிங்க இவிங்க எல்லாரும் ஆஹா ஓஹோ ன்னு பேச வச்சி அதுக்கப்புறம் ஒரு கையை ஒசத்தி காமிச்சு ரொம்ப ஸடைலாக வெல்வோம் ஒன்றாகன்னு பேசுற மாதிரி டிவியில காமிக்குறாங்களே அது சிப்பு சிப்பா இல்லையா? எங்களுக்கு அதை பாக்குறப்ப எப்புடி சிரிக்குறதுன்னு தெரியலை. மாறாக எரிச்சல் வருது. அதுக்கு பேச முடியாத க உ பீஸ் அண்ணாமலை பேசுறதை சிப்பு சிப்பா இருக்குதும்பாய்ங்க. தன்னோட முதுகில் ஓடும் கூவத்தை பாக்க மாட்டாய்ங்க. அண்ணாமலை அடிக்குற அடியில இவனுங்க சிதறி ஓடுறது க உ பீஸ் களுக்கு தெரியாது போல.
நம்ம ஸார் பேச்சை உத்து பார்த்தா உள்குத்தா நம்ம கம்பெனி பற்றி சொல்ற மாதிரியே இருக்கு. செவனேன்னு டெய்லி சிப்பு காட்டினு இருந்தவரை நான் ஒன்னை டெல்லி இட்டுனு போறேன்..
ஆமாம்.. குடும்பம் இல்லாதவர்கள் தான் நாட்டை ஆளவேண்டும் இவரது தலைவர் மாதிரி
நிறைய கூட்டங்கள் போட்டு மக்களிடம் பேச வேண்டும். எல்லா தலைவர்களும் செல்ல வேண்டும். சும்மா பேட்டி கொடுத்தால் மட்டுமே போதாது
விஜய்இன் பின்னடைவை அதிமுக கூட்டணி சாதகமாக்கிக்கொள்ளவேண்டும் . இது தான் நேரம்.

பாஜகவிலும் வாரிசு இருக்கிறது... ஆனால் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரே குடும்பம் பல துறைகளை - திரைத்துறை உட்பட - வளைத்துப்போடும் அட்டூழியத்தை வேறு எந்தக் குடும்பமும் செய்வதில்லை ......