பிரசார பயணம் குறித்து விஜய் ஆலோசனை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம்; புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு ஆகியவை குறித்து, த.வெ.க., தலைவர் விஜய், தன் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு, ஏப்.,9ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. வரும் 23ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். எனவே, புதுச்சேரி தேர்தலில், த.வெ.க., சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் 50 பேர், நேற்று சென்னை பனையூர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்களிடம், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் நேர்காணல் நடத்தினார். அப்போது தேர்வு செய்யப்பட்ட 30 பேரிடம், விஜய் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், கட்சியின் மூத்த நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல்குமார் ஆகியோருடன், விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக தேர்தலில், த.வெ.க., வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும், விஜயின் பிரசார சுற்றுப் பயண திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை அல்லது வரும் 20ம் தேதி, புதுச்சேரிக்கான த.வெ.க., வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.
இம்மாதம் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்திவிட்டு, ஏப்., 7ம் தேதி வரை புதுச்சேரியில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.
அப்போதே அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலுாரிலும் பிரசாரம் செய்ய உள்ளார். மொத்தமாக தமிழகம் முழுதும் 25 நாள்கள் பிரசார செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
கட்சி ஆரம்பித்து மூன்றாவது வருடம் தொடங்கியாச்சு இனிமேலாவது இந்த பனையூர் பண்ணையார் ஜோசப் விஜய் வெளியே வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா?
மக்கள் தொகை குரைக்க வேந்டும் என்று எத்தநையோ அறசியள் தளைவர்கல் பேசுகின்றனர். நடய்முரைப்படுத்தி செயளாட்ருபவர் சேசப் விசய் மட்டுமே
என்னது பிரச்சார பயணமா? இவனெல்லாம் ஒரு ஜென்மம் என இவனை நம்பி வரும் ஆட்டு மந்தை தருதலைகளில் எவனுக்கு சவக்குழி தோண்ட காத்திருக்கிறானோ தெரியவில்லை நல்ல மனிதர்களுக்கெல்லாம் சீக்கிரம் சாவு வருகிறது ஆனால்........

நம்மை பார்த்து யாரும் விசிலடிச்சான் குஞ்சுகள் என சொல்லி விடக்கூடாது என்று சொன்ன நடிகர் ஜோசப் விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுதான் காமெடி? ஆனால் இந்த நடிகர் தேர்தல் பிரச்சாரம் பண்ணும் போது இவரது ரசிக அணில் குஞ்சுகள் அடிக்கும் விசில் சத்தம்தான் பொதுமக்களுக்கு சோகம்!