ஆதவ் அர்ஜூனா பேச்சு உண்மைக்கு மாறானது; ரஜினி கண்டனம்
சென்னை: 'என்னைப்பற்றி தவெக கட்சியின் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா கூறியிருப்பது உண்மைக்கு மாறான கருத்து. காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்,' என்று நடிகர் ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக மிரட்டியதால்...
சென்னையில் நடந்த த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, 'திமுக மிரட்டியதால் தான் அரசியலுக்கு வரும் முடிவை ரஜினி கை விட்டார்'' என கூறியிருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறையினர், ரஜினி ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறு கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி,
திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.
இவ்வாறு ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
@twitter@https://x.com/rajinikanth/status/2033787480840015977?s=20
@@twitter@@
Advertisement
இவன் இப்போது திமுக சொம்பு . அவன் சொல்ற காலம் டிவிகே தோட்ரு நிற்கும்.
காசு போட்டு இந்த 75 வயசு ஹீரோ வ
படம் எடுக்கற முதலாளிய சொன்னவுடனே தலைக்கு வருத்தம் வந்துடுச்சு ப.
யாருக்கும் பயப்படமாட்டேன், அப்படியாக்கும், இப்படியாக்கும் ன்னு சினிமா டயலாக் விட்டு என்னமா நடிச்சாரு.
முதலாளி விசுவாசம் ரொம்ப ஜாஸ்தியா இருக்குப்பா
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று பின்வாங்கியபோதே தமிழகமக்களுக்கு தெரிந்துவிட்டது.. சினிமாவில்மட்டும்தான் வீரவசனம் பேசுவார். அரசியலுக்கு வராததற்கு அவர்சொன்ன காரணம்தான் செம்ம காமெடி.. ஒன்னு.. கோரனாவால் பாதிப்பு, வயதுமூப்பு, உடம்பு தளர்வு, அறுவை சிகிச்சை.. அதன்பிறகு 7,8 படங்களுக்கு மேல் சின்ன சின்ன பொண்ணுங்களுடன் குத்தாட்டம் எல்லாம் ஆடி, பல பயில்வான்களுடன் சண்டைக்காட்சிகளில் நடித்து பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து விட்டார்.. ஒரு படத்திற்கு 250 கோடி என்றாலும் 8 படத்திற்கு 2500 கோடி ஆகிவிட்டது.. இதைக்கேட்டால் அறிவுள்ள குழந்தைகூட நம்பாது.. காலக்கொடுமை.. 50 ஆண்டுகள் ரசிகன் என்ற பெயரில் இவர்பின்னால் பால்குடம், கற்பூர ஆரத்தி தூக்கியவன் பாடுதான் பரிதாபம்.
யார் என்ன சொன்னாலும் ரஜனி அவர்கள் தீவிர திமுக பற்றாளர்தான். இப்போது கூட தலைமேல் கலக்கம் அவரை கவனிக்கும் விதத்தில் கவனித்தால், ஆண்டவனே வந்தாலும் அப்பா போன்று நல்காட்சியைக் கொடுக்க முடியாது என்று சொல்லத்தயங்காதவர்
ரஜினி சார் ,
ஆதவ் அர்ஜுனா சொன்ன அவதூறு கருத்துக்கு எதிராகவும், உங்களுக்கு ஆதரவாகவும் நானும் பேசினேன், எனக்கும் உங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கவும்.
இப்படிக்கு V S மணி, நெல்லை.
யச்சச்ச யச்சச்ச கச்சச்ச கச்சச்ச சென்றதைப் பற்றி என்ன பேச்சு? நிகழ் கால நிலவரம் என்ன? யாருக்கு ஆதரவு? இல்லை, அனைவரும் அவர் மாதிரி ரகசியமாக ஓட்டளித்தால், நாட்டுக்கு நல்லது!

இது குறித்து நான் 2021 க்கு முன் நடந்ததைக் கூற விரும்புகிறேன். ரஜினி அவர்கள் அந்த சமயம் ஐராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிடியில் Sun Picture க்காக ஒரு ஷூட்டிங்கில் இருந்தார். அவர் ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பியதும் கட்சி ஆரம்பிப்பதர்காக எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டாகியது. அது சமயம், கருணாநிதியின் கட்டாயத்தின் பேரில், திரு மாறன் அவர்கள் ஹைராபாத்திற்கு சென்று அவரிடம் பேசியபின் தான் அவர் சென்னை திரும்பியதும் கட்சி அரம்பிக்க வில்லை என்று அறிக்கை விட்டார். இந்த இடைப்பட்ட தினத்தில், அவர் கட்சி ஆரம்பிக்காமல் இருக்க பல நூறு கோடி ரூபாய்கள், ரொக்கமாக கை மாறியது என்று கூறப்பட்டது. எனவே ரஜினி அவர்கள் செல்லமாக மிரட்டப்பட்டதாலும், பல நூறு கோடி ரூபாய் பணத்திற்காகவும்தான் கட்சி ஆரம்பிக்கவில்லை. இது தமிழக திரைப்படத்துறையில் உள்ள பலபேருக்குத் தெரியும், திரு விஜய் அவர்கள் உட்பட. இது அன்றைய பத்திரிக்கைகளில் வந்த கிசு கிசு செய்திகள். எனவே ஆதவ் அர்ஜூனா பொய் கூறவில்லை.