சட்டசபை தேர்தலில் போட்டி :காங்., கட்சியில் நேர்காணல்
கடலுார்: கடலுாரில் காங்., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடந்தது.
தமிழக சட்டசபை தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. அதன்படி, கடலுார் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கடலுார், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களிடம் நேர்காணல் கடலூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் ரங்கமணி தலைமையிலான குழுவி னர் நேர்காணல் நடத்தினர்.
அதில் ஒரு தொகுதிக்கு 5 பேர் கொண்ட பெயர் பட்டியலை மாநில தலைமைக்கு அனுப்பி வைத்தனர். இந்த 5 பேரில், 3 பேர் அடங்கிய பட்டியலை அகில இந்திய தலைமைக்கு மாநில தலைமை அனுப்பி வைக்கப்படும்.
இதில், ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார், என நிர்வாகிகள் கூறினர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்