Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 தேர்தல் நடத்தைகள் குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

 தேர்தல் நடத்தைகள் குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

புவனகிரி: புவனகிரி சட்டசபை தொகுதியில், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.

தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கமணி தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், ராமதாஸ் முன்னிலை வகித்தனர். தேர்தல் துணை தாசில்தார் வேலுமணி வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது சாதி, மதம், மொழி பேசுவோர்களிடம் வெறுப்பை துாண்டு வகையில் ஈடுபடக்கூடாது.

அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்யும்போது அவர்களது கொள்கைகள், பணிகள் பாதிக்கும் வகையில் அமைதல் கூடாது. ஓட்டு சேகரிக்கும் போது சமுதாய மற்றும் சாதி பெயரை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

அரசியல் கட்சியினர் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து, தேர்தல் ஆணையம் ஏற்றால் தளர்வு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. மண்டல துணை தாசில்தார் கோவிந்தன் நன்றி கூறினார்.

Advertisement