மகளிர் ஓட்டுகளை குறி வைக்கும் தி.மு.க.,: 25 பெண் வேட்பாளர்களை களமிறக்குகிறது?
சென்னை: சட்டசபை தேர்தலில், மகளிர் ஓட்டை குறி வைத்து, சென்னையில் இருவர் உட்பட, தமிழகம் முழுதும் மொத்தம், 25 பெண்களை வேட்பாளராக களமிறக்க, தி.மு.க, முடிவு செய்துள்ளது. இதற்காக, கட்சியில் அமைப்பு ரீதியாக செயல்படும், மூன்று மாவட்டங்களுக்கு, ஒரு மகளிர் வீதம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., சார்பில் 12 மகளிர் போட்டியிட்டனர். அவர்களில் ஆறு பேர் வெற்றி பெற்ற நிலையில், கீதா ஜீவன், கயல்விழி ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர்.
ஆட்சிக்கு வந்த பின், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 1.31 கோடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை ஆகிய திட்டங்களால், மகளிர் ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்யும் முயற்சியில் கட்சி மேலிடம் ஈடுபட்டுள்ளது.
'மகளிர் திட்டங்களால், பெண்களின் ஓட்டுகள் முழுதும் கிடைக்குமா; அதற்கு இன்னும் என்ன செய்ய வேண்டும்' என, தேர்தல் வியூக நிறுவனங்களுடன், சில தினங்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலின் தரப்பு ஆலோசித்துள்ளது.
அப்போது, 'இலவச பஸ் பயணம் திட்டத்திற்கு மட்டும் பெண்களிடம் வரவேற்பு உள்ளது. தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களாக 30 பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தி.மு.க., அமைப்பு ரீதியாக செயல்படும் 77 மாவட்டங்களில், மூன்று மாவட்டங்களுக்கு ஒரு மகளிர் வீதம், குறைந்தது 25 தொகுதிகளில் பெண்களை வேட்பாளராக களமிறக்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
அமைச்சர்கள் கவுன்சிலர் மாவட்ட செயலாளர்கள் மனைவிக்கு சீட்டு கொடுப்பார்கள். கடைநிலை திமுக பெண்களுக்கு சீட்டு கொடுக்க மாட்டார்கள். அவர்களிடம் பணம் இருக்காது.
33 விழுக்காடு பெண்களுக்கே ன்னு மேடை தோறும் ஒலி பெருக்கி வைத்து பிரசாரம் பண்ண வசதியா போச்சு. திருட்டு திராவிடனுங்க பெண்களுக்கு குடுக்குற மதிப்பு எப்புடி ன்னு குக்கிராமத்தில் ஆரம்பிச்சு கோட்டை வரை எல்லாருக்கும் தெரியுமே..
கிராம , நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள அதே 'செட்டில் மனைவி' ஆதிக்கம் கணவர், அல்லது குடும்பத்தின் ஆன் உறுப்பினர் என்ற சம்பிரதாயம் சட்டமன்றத்துக்கு வரும் அவ்வளவுதான்
புதிய பாதை பலன் தர போவதில்லை தமிழக பெண்கள் கொலவெறியில்
உள்ளார்கள்....

திமுகவை எங்கே தட்டினால் வலிக்கும் என்று அதிமுகவுக்கு இன்னும் புரியவில்லை .... அல்லது தட்ட மனமில்லை .....