'மூத்தவர்' தகுதி பொருந்தாது! மா.செ.,க்கள் மத்தியில் ஸ்டாலின் ‛நறுக்' பேச்சு
சென்னை : ''அடுத்து அமையும் தி.மு.க., ஆட்சியில், 'சீனியாரிட்டி' என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் தான்; மூத்தவர் என்ற தகுதியெல்லாம் இனி பொருந்தாது. அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே அமைச்சர் பதவி என்பதை, அழுத்தம் திருத்தமாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்,'' என, மாவட்டச் செயலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தல் பணியில், 'நம்பர் 1' ஆக தி.மு.க., இருந்து வருகிறது. அரசியல் களத்தில் தி.மு.க.,வின் கை ஓங்கியே இருக்கிறது. பொது மக்களுக்கு வழங்கிய நலத் திட்டங்களால், அவர்கள் மத்தியில் தி.மு.க.,வுக்கான ஆதரவு பெருமளவு கூடியுள்ளது.
கவனம்
கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க நினைத்தவர்களின் சதியை முறியடித்து, புதிய கட்சிகளை அரவணைத்து, மிக பலமான கூட்டணியை கட்டியிருக்கிறோம். கூட்டணி வலிமை, நலத் திட்டங்கள், ஐந்தாண்டு சாதனைகள் உள்ளிட்டவற்றால், தி.மு.க., தான் வெல்லும் என்ற எண்ணத்தை, பொது மக்களிடமின்றி, எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்.
மாவட்டச் செயலர்கள் ஒவ்வொருவரும் அதில் கவனமாக இருக்க வேண்டும். உங்களது ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு அசைவும், பேச்சும், தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
வெற்றியை நெருங்கி உள்ளோம். இந்த நேரத்தில் தான் நாம் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து, 200 தொகுதிகள் வெல்வது இலக்கு என்பதை எண்ணி பணியாற்ற வேண்டும். தேர்தல் முடியும் வரை, எந்த உட்கட்சி பிரச்னையும் இருக்கக்கூடாது.
தனிப்பட்ட மனஸ்தாபங்கள், கட்சியின் வெற்றியை பாதிப்பதை எப்போதும் அனுமதிக்க முடியாது. யாராவது தேவையின்றி கட்சிக்குள் குழப்பமோ, பிரச்னையோ உண்டாக்கி, அது என் காதுகளுக்கு வந்தால், அவர் எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும், உடனே நடவடிக்கை பாயும் என எச்சரிக்கிறேன். தனிப்பட்ட நிர்வாகிகளை விட, கட்சியின் நலன் தான் எனக்கு முக்கியம். தேர்தல் நடக்கும் காலகட்டத்திலேயே நடவடிக்கை பாயும்.
இரண்டாம்பட்சம்
தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கின்றன. நம் தொகுதிகளில் நடப்பது, தலைவருக்கு தெரியவா போகுது என்ற நினைப்பில் இருக்க வேண்டாம். இந்த ஸ்டாலினுக்கு இரண்டு கண்கள் மட்டுமல்ல; 234 தொகுதிகளிலும் கண்ணும், காதும் இருக்கிறது. அத்தனை தகவலும் எனக்கு தனிப்பட்ட முறையில் வந்து விடும்; இப்பவும் வந்து கொண்டு தான் இருக்கிறது.
மாவட்டச் செயலர்கள் வசமுள்ள அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, மாவட்டச் செயலர்களும் வெற்றி பெற்றதற்கு சமம். அடுத்த முறை அமையுள்ள தி.மு.க., ஆட்சியில், 'சீனியாரிட்டி' என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். மூத்தவர் என்ற தகுதி எல்லாம் இனி பொருந்தாது.
அமைச்சர் பதவி என்பது, அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே என்பதை, அழுத்தம் திருத்தமாக இப்போதே மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலர்கள், கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று தான் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதே தவிர, வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பவர்கள் அல்ல என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
உழைப்பவர்களுக்கு பரிசு
வேட்பாளர் தேர்வு, யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். அவரை பிடித்தால், 'சீட்' கிடைக்கும்; இவரை பிடித்தால் சீட் கிடைக்கும் என, நேரத்தையும், உழைப்பையும் யாரும் வீணாக்க வேண்டாம்.
மக்களுக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே இம்முறை சீட். வெற்றி வாய்ப்புள்ள, உறுதியாக வெற்றி பெறும் ஆற்றல் உள்ளவர்களுக்கு மட்டுமே சீட். கட்சியின் அத்தனை நிர்வாகிகள் பற்றிய தகவலும் உடனுக்குடன், என் மேஜைக்கு வந்து கொண்டே இருக்கும்.
போட்டியிடும் 234 தொகுதிகளிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர். தான் மட்டுமின்றி, பிறரையும் வெற்றி பெற வைத்து, கட்சியின் வெற்றிக்கு உழைப்பவர்களுக்கு உண்டான பரிசு, தேர்தலுக்கு பின் தேடி வரும். இவ்வாறு அவர் பேசினார்.
@block
25 பெண் வேட்பாளர்கள்?
கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. சார்பில் 12 பெண்கள் போட்டியிட்டனர். அதில் 6 பேர் வெற்றி பெற்றனர். கீதா ஜீவன், கயல்விழி அமைச்சர்களாக உள்ளனர்.
இலவச பஸ் பயணம், மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் திட்டங்களால், மகளிர் ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்ய அதிகமான பெண்களை களம் இறக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்படும் 77 மாவட்டங்களில், மூன்று மாவட்டங்களுக்கு ஒரு பெண் வீதம், குறைந்தது 25 தொகுதிகளில் பெண்களை வேட்பாளராக அறிவிக்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின.
Advertisement
நாக்கை மடங்கி பேசினால் கூட பிரியோஜனம் இருக்காது என்று பல கூட்டங்களில் இருந்து பேச்சு அடிபடுகிறது
இந்த 80 வயது தத்தியும் வீட்டுக்குப் போய்த் தொலையலாம். நாடாவது சுபிட்ஷம் பெறும்.
மூத்தவரோ அல்லது இளையவரோ யாரை நிறுத்தினாலும் இனி திமுக ஆட்சிக்கு வரமுடியாது.
இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுககாரனுக ஒருத்தனுக்கும் எதிர்க் கட்சி என்றால் எப்படி அரசியல் பண்ண வேண்டும் என்றே தெரிய மாட்டேங்குது! அதனால பழையபடி ஸ்டாலின் தலைமையில் வீரியம் கொண்ட எதிர்கட்சியாக திமுக வரவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் இப்போதைய ஆசை!
ஆத்தா தீமக்காவுக்கு அங்கீகாரம் கொடுக்குமளவுக்கு முன்னாள் முதல்வரை கட்சியில் சேர்த்து தீம்க்கா பெருமைப்பட்டுக்கொள்கிறது. ஆனால் பின்னணியில் பழைய மாணவர்கள் புகைக்கிறார்கள். தீம்க்கா வெற்றி பெற உழைப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி...
அப்டின்னா முதல்வர்..
செ பா தான். ஏனெனில் அவரால் மட்டுமே லஞ்சம் குடுத்து எதையும் சாதிக்கும் வல்லமை உள்ளது. அப்போ துணை மற்றும் இணை முதல்வர் போஸ்ட் யாருக்கு?
பயமுறுத்தி, திட்டி, அகங்காரத்தின் உச்சில்நின்று பேசி, அடியாட்களை அனுப்பி, பண மூட்டைகளை காண்பித்து, அராஜகம் செய்து, மக்களை பயமுறுத்தி, இல்லாத பொல்லாத பொய்களை எல்லா சொல்லி, தேர்தலில் தில்லு முள்ளு செய்து, போலீசை பயன்படுத்தி திராவிட மாடல் அரசை தக்க வைத்த காலம் எல்லாம் அரோஹரா போயேபோயிடுச்சே இனி ஜென்மத்துக்கும் திரும்பிக்க்கூட இந்த அரசு பார்க்க முடியாது மக்கள் திருந்தி விட்டார்கள் தேர்தல் அறிவிப்பிற்காக வெகுநாட்களாக காத்துக்கிடந்தார்கள் இனி அவர்கள் சு நினைவிலே தங்களுக்கு சாதகமான அரசியலை தேர்ந்தெடுப்பார்கள் அந்த வரிசையில் திராவிட மாடல் அரசு என்பது இல்லவே இல்லை இனி எல்லா அமைச்சர்கள் மீது ஆட்சியில் சுரண்டப்பட்ட மக்கள் பணத்திற்க்காக வழக்குகள் தொடரும்

ஆட்சி, அதிகாரத்தை ஒரு பொறுப்பாகப் பார்க்காமல் ஒரு பிசினஸ் வாய்ப்பாகப் பார்த்தால் இப்படித்தான் ....