Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


வடசென்னையில் விஜய் போட்டி? த.வெ.க., ஆதவ் அர்ஜுனா தகவல்

வடசென்னையில் விஜய் போட்டி? த.வெ.க., ஆதவ் அர்ஜுனா தகவல்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: “தி.மு.க., - காங்., கூட்டணி, கல்லாப்பெட்டி கூட்டணி,” என, த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை குழு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.


த.வெ.க., சார்பில் சென்னையில் நேற்று நடந்த மகளிர் தினவிழாவில் அவர் பேசியதாவது:
விஜய், வட சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார். வில்லிவாக்கம் அல்லது பெரம்பூர் தொகுதியில் நிற்க வாய்ப்புள்ளது.

தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒருவரும் சாலையில் நடக்க முடியாது. சிறுமி முதல் பார்க்கும் பெண்களை எல்லாம், தி.மு.க.,வினர் கையை பிடித்து இழுக்கின்றனர். இப்படிப்பட்ட கட்சியை உருவாக்கி விட்டு, முதல்வர் ஸ்டாலின் தினமும் கண்மூடி செல்கிறார்.

தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கையெழுத்திட்டதும் தைரியம் வந்துவிட்டது போல் இருக்கின்றனர். அது மதசார்பற்ற கூட்டணி இல்லை; கல்லாப்பெட்டி கூட்டணி.

தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தால், நல்ல கட்சியாக இருக்கும். ஆளும் கட்சியாக வந்து விட்டால், கண்ணில் பார்ப்பதை எல்லாம் அடைய வேண்டும் என நினைக்கும். மத்திய அரசு விதிப்பது ஜி.எஸ்.டி., என்றால், தமிழகத்தில் ஸ்டாலின் சார் 'டேக்ஸ்', அதாவது எஸ்.எஸ்.டி.,

தேர்தல் அறிவிப்புக்கு பின், விஜய் தெருத்தெருவாக செல்லும்போது, மக்களின் எழுச்சியை பார்க்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

மார் 09, 2026 01:06 pm

என்னோட VOTE தி மு க கூட்டணிக்குத்தான்

Reply Rate this
மார் 09, 2026 12:40 pm

24 வயதில் மகன், 22 வயதில் மகள் இந்த வயதில் இவர்க்கு... , இவருக்கு போடணுமா வோட்டு

Reply Rate this
மார் 09, 2026 12:30 pm

எங்கு போட்டி இட்டாலும் விஜய் ஜோசப் thorkkapப் போவது உறுதி. சுத்த ஏமாற்று பேர்வழிகள்

Reply Rate this
மார் 09, 2026 11:44 am

விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்றால் எல்லா வாக்காளர்களும் பனையூர் செல்ல வேண்டும் என தேர்தல் கமிசனிடம் அனுமதி கேட்பார்கள்

Reply Rate this
மார் 09, 2026 11:42 am

ஜிஎஸ்டி வரி மத்திய மாநில இரண்டு அரசுகளும் விதிக்கிறது இந்த அடிப்படை கூட தெரியாத இவர் தலைவர் தற்குறி கூட்டம் என்பது சரிதான் போலிருக்கிறது

Reply Rate this
மார் 09, 2026 11:12 am

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதுவும் தெரியாது சத்தம் போட்டு கத்தி பேச மட்டுமே தெரியும் .வட சென்னை MGR காலத்தில் இருந்தே DMK வுக்கு சாதகமான தொகுதிகள் உள்ள இடம் . விஜயை முடித்து விட்டு அவருடைய இடத்தை அடையவே இந்த தற்கொலை தொகுதிகள்

Reply Rate this
மார் 09, 2026 10:00 am

வில்லிவாக்கம் தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் ஒன்று. ஒரு கட்சியின் தலைவர் யாராவது தனது முதல் தேர்தலிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியை தேர்ந்தெடுப்பார்களா? இங்கு விஜய் போட்டியிட்டால் அதிக நாட்கள் இங்கு மட்டுமே தனது நேரத்தை செலவிட நேரிடும். ஏற்கெனவே விஜய் சொல்லவே வேண்டாம். விஜயை கவிழ்க்க வெளியில் ஆள் வேண்டாம். உள்ளுக்குள் உள்ள நபர்களே போதும். மொத்தமாக முடித்து விட்டுத்தான் ஓய்வார்கள் போல?

Reply Rate this
மார் 09, 2026 09:53 am

பாவம் ஆதவ் அர்ஜுனாவை நம்பி விஜய் ஏமாறப் போகிறார். ஆர்.கே.நகரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் வட சென்னைதான். 20 ரூபாய் டோக்கன் விஜய்க்கு ஞாபகம் இருக்கட்டும். இங்கே வேறு மாதிரியான அணுகு முறையை கையாள வேண்டும். அந்த அணுகுமுறை எல்லாம் முதல் தேர்தலிலேயே விஜய்க்கு சரியாக வராது. விஜய் தன் தனிப்பட்ட செல்வாக்கு அதனுடன் சார்ந்த அவர் சமூக வாக்குகளையும் சேர்த்துப் பெற்றால்தான் எளிதான வெற்றியைப் பெற முடியும். விஜய்க்கு பிடித்தாலும், பிடிக்கா விட்டாலும் இது தான் தமிழக தேர்தல்களில் நிதர்சனம். அந்த வகையில் திருச்சி கிழக்கு என்பதுதான் விஜய்க்கு சரியான தேர்வாக இருக்கும்.

Reply Rate this
மார் 09, 2026 09:41 am

பிரச்சாரத்திற்காவது இவன் தொகுதிக்கு போவானா அல்லது எல்லா வாக்காளார்களையும் இவன் பனையூர் வீட்டிற்கு வரசொல்வானா

Reply Rate this
அவன் இவன் என்று ஏக வசனம் வேண்டாம் முதலில் களத்தில் அவரை எதிர்த்து வாங்க பார்ப்போம்
மார் 09, 2026 10:18 am
Rate this
BHARATH - TRICHY
லட்சுமி நரசிம்மன் மரியாதை கொடுக்கிற அளவுக்கு அந்த ஆள் அவ்ளோ ஒர்த் இல்லை.
மார் 09, 2026 10:34 am
Rate this
Anand - chennai
னையூர் வீட்டிற்கு வாக்காளர்கள் சென்று பார்க்க முதலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறவேண்டும், பிறகு இந்திந்த தேதியில் இவ்வளவு பேர் என டோக்கன் வாங்கி அதற்க்கு தகுந்தாற்போல் வரிசையில் நின்று வாக்காளர் அட்டையை காண்பித்து தங்களோட ஆதரவை தெரிவிக்கவேண்டும்.
மார் 09, 2026 10:57 am
Rate this
Anand - chennai
...பட்டுக்குஞ்சம் என்பது போல இவருக்கெல்லாம் மரியாதை என்ன வேண்டிக்கிடக்கு?
மார் 09, 2026 10:59 am
Rate this