Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 தோல்வி பயத்தில் ஸ்டாலின்: மத்திய அமைச்சர் முருகன்

 தோல்வி பயத்தில் ஸ்டாலின்: மத்திய அமைச்சர் முருகன்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருச்சி: திருச்சியில், வரும் 11ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று மத்திய இணையமைச்சர் முருகன் பார்வையிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி: தேசிய ஜனநாயகக் கூட்டணி, 30 கட்சிகளுடன் பலமாக உள்ளது; தி.மு.க., கூட்டணி வலுவிழந்துள்ளது. இதனால், முதல்வர் ஸ்டாலின் தோல்வி பயத்தின் உச்சத்தில் இருக்கிறார்; தோல்வி பயத்தில் கண்டதையும் பேசி வருகிறார்.

மக்களுக்கு இலவசங்கள் தரக்கூடாது என்று கூறிய த.வெ.க., தலைவர் விஜய், இப்போது இலவசங்களை அறிவித்திருக்கிறார். அவரது அறிவிப்பு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும், மக்களிடம் எந்த அளவுக்கு ஓட்டுகள் வாங்குவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. நடிகரை பார்க்க வரும் கூட்டம், ஓட்டுகளாகும் என்பதெல்லாம் எம்.ஜி.ஆர்., காலத்தோடு முடிந்து விட்டது.

கவர்னர் மாற்றம் என்பது வழக்கமான நடைமுறை. அதன்படியே, கவர்னர் ரவி மாற்றப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், சமையல் காஸ் விலை உயர்ந்துள்ளது.

எனினும், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால், காஸ் விலையை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மார் 09, 2026 08:31 am

தேர்தல் சந்திக்க வேண்டும்

Reply Rate this
மார் 09, 2026 08:19 am

இப்படியே பேட்டி கொடுப்பதை நிறுத்தி விட்டு மக்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூறுங்கள். பாஜகவினர் தூங்கி வழிகிறார்கள். எந்த பிரச்சனையும் தெரியவில்லை. திமுக விடம் கற்றுக்கொள்ளுங்கள். ஊதி பெரிதாக்கும் தில் வல்லவர்கள். நீங்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன் படுத்த தெரியவில்லை.

Reply Rate this
மார் 09, 2026 07:30 am

இவருக்கு பொது அறிவு கூடவா கிடையாது. எப்பவும் எடைக்கு மடக்க பேசிகிட்டு.

Reply Rate this
உனக்கு ரொம்ப அறிவோ
மார் 09, 2026 12:13 pm
Rate this
மார் 09, 2026 07:10 am

பார்த்து பல்லு படாம பேசுறாரு வண்டு முருகன்

Reply Rate this
மார் 09, 2026 05:00 am

ஒழுங்கா அங்கிட்டு ஓடிப்போய் விடு. கோபாலபுரம் குடும்பம் தயாரித்த பராசக்தி திரைப்படக் குழுவை வெற்றிவிழா என்று அதுவும் திரைப்படம் வெளியான மூன்றாம் நாளில், பல லட்சம் முக்கியமான நாட்டுப் பணிகளுக்கு இடையில் பிரதமரும், இந்த பொறுப்பற்ற மந்திரியும் அவர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கும்மியடித்து விட்டு இப்பொழுது பேச்சைப் பார் பேச்சை.

Reply Rate this
நீங்கள் கூறியது சரிதான்.
மார் 09, 2026 06:45 am
Rate this