Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


கருணாநிதியே ஸ்டாலினை நம்பவில்லை: பிரசாரத்தில் பழனிசாமி கடும் தாக்கு

கருணாநிதியே ஸ்டாலினை நம்பவில்லை: பிரசாரத்தில் பழனிசாமி கடும் தாக்கு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், அ.தி.மு.க., சார்பில், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார கூட்டம் நேற்று மாலை நடந்தது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மகளிர் தினத்தை முன்னிட்டு ரோஸ் நிற பலுான்களை பறக்கவிட்டு, மகளிர் தின வாழ்த்துக்கூறி பேசியதாவது:

இன்னும், எட்டு நாளில் தேர்தல் அறிவிப்பும், அடுத்த மாதம் தேர்தலும் வந்துவிடும். தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, 'அ.தி.மு.க.,வை, பா.ஜ., விழுங்கிவிடும்; அ.தி.மு.க.,வையே அழித்துவிடும்' என்கிறார். அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.

அதே கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க.,வில் எங்களுக்கு மரியாதை இல்லை' என குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நேரத்தில் தி.மு.க.,வின் 'பி' டீம் என நாங்கள் கூறி வந்த பன்னீர்செல்வம், அ.தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டளித்தார்.

தற்போது, தி.மு.க., பக்கம் சென்று, தன்னை 'பி' டீம் என நிரூபித்துள்ளார். 'கெடுவான் கேடு நினைப்பான்; அவனும் கெடுவான்' என்பதற்கு ஏற்ப பன்னீர்செல்வம், ஸ்டாலினுடன் இணைந்துள்ளார்.

அ.தி.மு.க.,வுக்கு துரோகம் இழைத்ததால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மாக்கள் அவரை அ.தி.மு.க.,வில் இருந்து விரட்டி அடித்துள்ளன.

அதனால், அ.தி.மு.க., இன்று துாய்மையான இயக்கமாகி உள்ளது. 'ஆமை புகுந்த வீடு உருப்படாது' என்பர். அதேபோல பன்னீர்செல்வம் புகுந்த தி.மு.க.,வும் உருப்படாது.

அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டனும், முதல்வர் உட்பட எந்த பதவியையும் பெற முடியும். தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பதவிகளை பெற முடியும். கருணாநிதி உயிரோடு இருந்த வரை, ஸ்டாலினை அவர் நம்பவில்லை.

கட்சி தலைமை, முதல்வர் பதவி என எதையும் ஸ்டாலினுக்கு தரவில்லை. செயல் தலைவர், துணை முதல்வர் என்றே பதவிகளை வழங்கினார். கருணாநிதியே நம்பாத ஒரு நபர் தான் ஸ்டாலின். இதை உலகம் அறியும். இவ்வாறு அவர் பேசினார்.



தி.மு.க., போடுவது இரட்டை வேடமே!



கடந்த 2011 முதல் 2021 வரை பல தேர்தல்களில் தி.மு.க., தோற்றுள்ளது. ஆனால், தோல்வியே அடையாத கட்சி போல, முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஸ்டாலின் வாயைத் திறந்தாலே பொய் தான் வருகிறது. இதை தமிழக மக்களும் நன்கு அறிவர். தி.மு.க.,வுக்கு வரும் சட்டசபை தேர்தல் தான் இறுதி தேர்தலாக இருக்கும்.

தி.மு.க., எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு. ஆளும்கட்சியாக இருக்கும் போது வேறொரு நிலைப்பாடு. தி.மு.க. எப்போதும் இரட்டை வேடம் தான் போடும். தி.மு.க., ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. கொள்ளையடித்த பணத்தை வெளிநாடுகளில் தி.மு.க.,வினர் பதுக்கி உள்ளனர்.

- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,

Advertisement

மார் 09, 2026 06:13 pm

தன் மேல் உள்ள குற்றங்களை மூடி மறைக்க எந்த எல்லைக்கும் செல்பவர் இந்த அய்யா . மக்களால் தேர்ந்து எடுக்கப்படாமல் குறுக்கு வழியில் குறுக்கு சாலையில் பதவி பெற்று முதல்வர் ஆனவர். ஸ்டாலின் பற்றி தெரிந்த பழைய அரசியல்வாதி சோ உட்பட ஸ்டாலின் வாரிசு அரசியலில் வந்தவர் இல்லை என்பதை சொன்னார்கள்.
இவர் எல்லாம் ஸ்டாலின் பத்தி பேச தகுதி இல்லை .

Reply Rate this
மார் 09, 2026 04:08 pm

கருணாநிதி ஸ்டாலின் ஐ நம்பவில்லை. அப்படியே வச்சுக்குவோம்.. சசிகலா உங்களை ரெம்ப நம்பினார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என எங்களுக்கு தெரியும்.

Reply Rate this
மார் 09, 2026 02:56 pm

இவர் கூட இருக்கிறவர்கள் TTV போன்றோர் இவர் போல துரோகி யாருமே இல்லை என்று கூவிக் கொன்டு இருந்தவர்கள் தானே

Reply Rate this
மார் 09, 2026 02:53 pm

அனைவரும் அறிந்த உண்மைதான் இது ......

Reply Rate this
மார் 09, 2026 02:23 pm

தான் மட்டுமே கட்சியில் உயர் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய OPS அவர்களை அவமானபடுத்தி எப்படி பதவிகாக செய்தார் என்பது ஊருக்கே தெரியும். அதுபோல் கருணாநிதி அவர்களுக்கு அப்பாவிற்கான மரியாதையை கொடுத்து அவர் இருக்கும் வரை சண்டை போடாத ஒரே தலைவர் ஸ்டாலின். அன்புமணி ஸ்டாலின் இடம் இருந்து நிறைய கற்று கொள்ள வேண்டும்

Reply Rate this
மார் 09, 2026 12:39 pm

என்ன பழனி 10 தோல்வி அடைந்து தொடர்ந்து 10 வெற்றி பெற்றவரை பற்றி நீ பேசலாமா

Reply Rate this
மார் 09, 2026 09:59 am

உண்மையயை உரக்க சொன்ன பழனி..

Reply Rate this
எது உண்மை? புருடாலா??
மார் 09, 2026 03:51 pm
Rate this
மார் 09, 2026 07:37 am

கருணாநிதி எப்படி ஸ்டாலினை நம்ப வில்லையோ, அதே போல், ஜெயலலிதாவும் எடப்பாடியை நம்ப வில்லை.

Reply Rate this
EPS won maximum seats in Salem district in 2016 which has resulted jaya madam to continue power in 2016. The most trusted subordinate of jaya madam is edappadi Palanisamy.
மார் 09, 2026 10:13 am
Rate this
மார் 09, 2026 07:36 am

உங்களையும் உங்க மகன் கூட நம்ப மாட்டான்!

Reply Rate this
மார் 09, 2026 06:45 am

எதிர்பாராமல் உங்களுக்குக் கிடைத்த பதவி இந்த பொதுச் செயலாளர் பதவி... ஆனால் மக்களைக் கவரும் வசீகரம் உங்களிடத்தில் இல்லை... அதனாலயே இந்தத் தேர்தலில் நீங்கள் கண்டிப்பாகத் தோற்கப் போகிறீர்கள்... மக்கள் உங்களைத் தூக்கி எறியப் போகிறார்கள்... இனி ஒரு போதும் அதிமுக எழவே எழாது...

Reply Rate this
எதிர்மயமாக நடந்தால் நீயும் ... எல்லாம் ரெடியா இருக்கட்டும்
மார் 09, 2026 08:24 am
Rate this