Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


சென்னையில் தொகுதிகள் கேட்டு தி.மு.க.,வுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி

 சென்னையில் தொகுதிகள் கேட்டு தி.மு.க.,வுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- நமது சிறப்பு நிருபர் -
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், வேளச்சேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டது; ஸ்ரீபெரும்புதுாரில், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வென்றார்.
இந்த முறை எழும்பூர் அல்லது பூந்தமல்லி தொகுதியை அவர் கேட்பதாக கூறப்படுகிறது. கூட்டணியை காப்பாற்றியதில் முக்கிய பங்கு வகித்த அவரது வேண்டுகோளை, நிராகரிக்க முடியாத நிலையில் தி.மு.க., உள்ளது. மேலும், தி.நகர் தொகுதியையும் காங்கிரஸ் கேட்கிறது.
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, தனக்காக விருகம்பாக்கம் தொகுதியை கேட்பதால், முடியாது எனக்கூற முடியாமல் தி.மு.க., தவிக்கிறது.
மா.கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத் தலைவர் சவுந்தரராஜன், பெரம்பூர் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். அவருக்காக பெரம்பூர் அல்லது மதுரவாயல் தொகுதியை மா.கம்யூ., கேட்கிறது.
இது தவிர, ஆர்.கே.நகர் தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்பதாக கூறப்படுகிறது. சென்னையில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதை தவிர்த்து வரும் தி.மு.க.,வுக்கு, இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மார் 10, 2026 08:41 am

இதெல்லாம் தீயமுகாவின் ஏற்பாடு தான். இந்த முறை நகர்ப்புறங்களில் அப்பா மாடல் படு தோல்வி அடையும் எனவே சின்ன சார் திருவாரூர் பெரியசார் மயிலாடுதுறை என்று ஊபிஸ்கள் பேசுகின்றனர்

Reply Rate this
மார் 10, 2026 07:59 am

அடிமைகளுக்கு வந்த ஆவேசத்தை பாரு. வேண்டுமென்றால் இன்னும் ஒரு கூடுதல் இனிப்பு பெட்டி கொடுக்கலாம். அவளவுததாம். நவதுவாரங்களையும் பொத்திக்கிட்டு போவதுதான் நல்லது. முரசொலியில் சிலந்தியை வலை பிண்ண வெச்சிடாதீங்க.

Reply Rate this
மார் 10, 2026 06:03 am

எது கூடுதல் பெட்டி கேட்டு கூட்டணிக் கட்சிகள் நெருக்கடியா?

Reply Rate this