அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் செல்லாக்காசுகள்: இபிஎஸ் பேச்சு
ஈரோடு: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் செல்லாக்காசுகள். அவர்கள் திமுகவிடம் சரண் அடைகின்றனர் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: அதிமுகவுக்கு துரோகம் இழைத்தவர்களை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா விரட்டி அடித்துள்ளது. எந்த கொம்பனாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. அதிமுகவை பாஜ விழுங்கிவிடும், அழித்துவிடும் என ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.
கருணாநிதியே நம்பாத, பதவி கொடுக்காத ஒரு நபர் ஸ்டாலின். உதயநிதி திமுகவுக்கு என்ன செய்தார். திமுகவில் குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் பேசினார். நன்றியை மறந்து திமுகவில் புகுந்துள்ளார் ஓபிஎஸ்.
கஞ்சா விற்பனை செய்வதே திமுகவினர் தான். அதனால் தான் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கள் கட்சியை நாங்கள் காப்பாற்றிக் கொள்கிறோம். உங்கள் கட்சியை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.
ஆமை புகுந்த வீடு போல், ஓபிஎஸ் எங்கு சென்றாலும் அந்த கட்சிக்கு அதேகதி தான். முடிந்துவிடும். சுயநலவாதிகள் எந்த கட்சியில் இடம்பெற்றாலும் அக்கட்சி அழிந்துவிடும். டெபுபேசனில் சென்றுள்ளனர். அதிமுகவில் பயிற்சி பெற்று திமுகவில் வேலை செய்கின்றனர். அதிமுகவில் பதவி சுகம் பெற்றவர்கள் திமுகவில் அடைக்கலம் புகுந்துள்ளனர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் செல்லாக்காசுகள். உங்களிடம் சரண் அடைகின்றனர். யார் யார் எல்லாம் துரோகம் இழைத்தார்களோ, நீக்கினாலோ அவர்களை ஸ்டாலின் சேர்க்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
ஆத்தா தீமக்காவுக்கு வாக்கு வங்கி இருப்பது உண்மை என்றால் இதை நம்பலாம் - ஆனால் பழைய ஆத்தா தீமக்காவினர் இன்று தாத்தா தீம்க்கா ரெக்ரூட்களளாகி பலர் இன்று தாத்தா தீம்க்காவில் பழைய மாணவர்களை மிஞ்சி வெற்றி பெற்று இருக்கிறார்கள். அடைப்பெடுத்தபின்னும் விசுவாசம் காட்டுகிறார்கள். ஆகவே மொத்த கட்சியுமே கூடாரத்தை மாற்றி விட்டது போல தெரிகிறது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள் மதியம் 1 மணிக்கு தெரிந்துவிடும் யார் செல்லாக்காசு என்று பாவம் 10 தோல்வி எட்டப்பன் சுதந்திர போராட்ட தியாகி தினகரன் சொன்னது பழனிச்சாமி 11 தோல்வி பழனிச்சாமியாக வாழ்த்துக்கள் சங்கிகள் கூட்டம் நாட்டின் புற்றுநோய் திருட்டு முன்னேற்றக் கழகம் நாட்டின் சர்க்கரை வியாதி போன்றது சர்க்கரை நோயை விட புற்றுநோய் அபாயகரமானது
அதிமுகாவுக்கு மூடுவிழா நடத்துவதற்கு முடிவு பண்ணிவிட்டீர் மிஸ்டர் எட்டப்ஸ்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் செல்லாக் காசுக்கள். இன்னும் அதிமுகவில் இருப்பவர்கள் பாஜகவால் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட செல்லாத நோட்டுக்கள்
காட்டி கொடுத்த வரலாற்றில் எப்படி எட்டப்பனோ, துரோக வரலாற்க்கு ஒபீஸ். stalin is more dangerous than karunanidhi, ஆனால் ஓபிஎஸ் is most dangerous - தனது சொந்த நலனுக்காகவும் தனது மகனின் நலனுக்காகவும் யாரையும் காட்டிக் கொடுப்பவர்.

பழனிசாமி முகத்தில் இப்பவே சவகளை வந்து விட்டது. பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து உள்ளதையும் தொலைத்து விட்டார். அது சரி அதிமுகவுக்கு மாற்றாக எந்த கட்சி வரும் ..?