'சீட்'கள் முக்கியமில்லை ஒற்றுமை தான் முக்கியம்
கூட்டணியில் என் கட்சிக்காக பேச்செல்லாம் தேவையில்லை. எங்கள் கடமையை மட்டும் நாங்கள் செய்வோம். நாங்கள் என்ன பேச வேண்டும் என்பது, கூட்டணிக்கு தலைமை தாங்குவோருக்கு தெரியும். அதனால், அவர்கள் எங்களுக்கு நல்லதே செய்வர். தி.மு.க., கூட்டணிக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வரப் போவதாக சொல்கின்றனர். யார் வந்தாலும் கூட்டணி சார்பாக வரவேற்போம். அனைவரும் வர வேண்டும்; தமிழகம் வெல்ல வேண்டும்.
மக்கள் நீதி மய்யத்துக்கு எத்தனை தொகுதிகள், கூட்டணி சார்பில் ஒதுக்கப்படும் என இப்போதே சொல்ல முடியாது. உறுதியான பின், அதிகாரப்பூர்வமாக நாங்களே வெளியிடுவோம்.
கட்சிக்கு சீட் முக்கியமல்ல; கூட்டணியில் ஒற்றுமைதான் முக்கியம்; நோக்கமும் அதுதான். அதை நோக்கித்தான் எங்கள் பயணம் இருக்கும்.
- கமல், தலைவர், மக்கள் நீதி மய்யம்
Advertisement

வாசகர்கள் கருத்துகள்