Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 தேர்தல் பணிகளை கண்காணிக்க த.வெ.க.,வில் பொறுப்பாளர்கள்

 தேர்தல் பணிகளை கண்காணிக்க த.வெ.க.,வில் பொறுப்பாளர்கள்

சென்னை: த.வெ.க.,வில், சட்டசபை தேர்தல் பணிகளை கண்காணிக்க, செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. நடிகர் விஜய் துவக்கி உள்ள த.வெ.க., முதன் முறையாக தேர்தலில் களம் இறங்குகிறது.

எனவே, கட்சியின் தேர்தல் பணிகளை கண்காணிக்க, முதன்மை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், இணை கண்காணிப்பாளர்களை, த.வெ.க., தலைவர் விஜய் நியமித்துள்ளார்.

கண்காணிப்பாளர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாக, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களின் தேர்தல் கண்காணிப்பாளராக ஆதவ் அர்ஜுனா; திருவள்ளுர் மாவட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ., பிரபாகர்; கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு முன்னாள் எம்.பி., சத்தியபாமா...

சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு கொள்கை பரப்பு செயலர் அருண் ராஜ்; மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இணை பொதுச்செயலர் நிர்மல் குமார் ஆகியோர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளுக்கும், தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தன்னார்வலர் புதுச்சேரி கண்காணிப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன்; காரைக்கால் கண்காணிப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., அசனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, த.வெ.க.,வில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விரைவில், வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.

எனவே, த.வெ.க., வேட்பாளர்களுக்கு, தேர்தல் நடைமுறைகளில் உதவ, முன்னாள் அரசு அதிகாரிகளை தன்னார்வலர்களாக நியமிக்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

Advertisement