Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


தொகுதி பங்கீடு குறித்து கனிமொழியுடன் பேசியது என்ன? கிரிஷ் சோடங்கர் பதில்

தொகுதி பங்கீடு குறித்து கனிமொழியுடன் பேசியது என்ன? கிரிஷ் சோடங்கர் பதில்

சென்னை: சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கனிமொழியுடன் பேசியது என்ன என்பது குறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக, கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. சென்னை வந்த காங். பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவரை தொடர்ந்து திமுக எம்.பி.கனிமொழியை காங். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று சந்தித்து பேசினார்.
இதுகுறித்து சென்னையில் அவர் அளித்த பேட்டி;
திமுக எம்பி கனிமொழியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. எத்தனை இடங்களை பெறுவது என்பது குறித்து திமுகவுடன் காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை திமுகவிடம் தெரிவித்து இருக்கிறோம்.
அது பற்றி பேசி வருகிறோம். அனைத்தும் இறுதியான பின்னர் உங்களுக்கு தகவல் தெரிவிப்போம். ராஜ்ய சபா சீட், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் கனிமொழியுடன் பேசினோம். ஆட்சி அதிகாரம் குறித்து பேசவில்லை.
இவ்வாறு கிரிஷ் சோடங்கர் கூறினார்.

Advertisement

பிப் 23, 2026 08:48 pm

வண்ணாரப்பேட்டை உனக்கு, கொறுக்குப்பேட்டை எனக்கு, கண்ணம்மாபேட்டை உனக்கு, சைதாப்பேட்டைஎனக்கு, கீழ்ப்பாக்கம் உனக்கு, கிளாம்பாக்கம் எனக்கு ... இப்படித்தான் பங்கீடு நடந்திருக்கும்.

Reply Rate this
பிப் 23, 2026 05:04 pm

திமுக என்னும் நரியின் வயிற்றில் காங்கிரஸ் என்னும் கோழி போய் வெகு வருடங்கள் ஆகிவிட்டன. இனி அது கூவும் என நினைப்பவன் அறிவீலிகள். இப்போது நடக்கும் பேச்சுஅஸ்ஸாமுடன் சேர்த்து கேரளவக்கும் தேர்தல் செலவுக்கு படி அளப்பதை பற்றிதான்.. விரைவில் பெங்களூரிலிருந்து சிவகுமார் ஏதாவது விழாவில் பங்கேற்ப சென்னை வருவார்.

Reply Rate this