பாஜ நடத்தும் சதுரங்க வேட்டை; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
நமது நிருபர்
''புலனாய்வு முகமைகளை மலிவாக பயன்படுத்தி, அரசியல் சதுரங்க வேட்டையை பாஜ நடத்திக் கொண்டிருக்கிறது,'' என்று தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பலமுனைப்போட்டி
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: புலனாய்வு முகமைகளை மலிவாக பயன்படுத்தி, அரசியல் சதுரங்க வேட்டையை பாஜ நடத்திக் கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறை, சிபிஐயை அழைத்து வந்தாலும் ஒரு கை பார்ப்போம். தமிழகத்தில் பலமுனைப் போட்டி இருக்கலாம்.
ஆனால், இது பலம் பொருந்திய போட்டியாக இல்லை. கவர்னர்கள் மூலமாக நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்துவதில் தொடங்கி, செயற்கையான நிதிச் சுமையை உருவாக்கி மாநிலங்களை முடக்க நினைப்பது வரைக்கும், அத்தனை செயல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
வளர்ச்சி அரசியல்
இது மட்டும்தான் அவர்களுக்கு தெரிந்த அரசியல். இதையெல்லாம் அரசியல் தளத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் எதிர்கொண்டு, "வளர்ச்சி அரசியல் என்றால், தமிழகத்தை பாருங்கள்" என்று சொல்லும் அளவிற்கு Development Politicsக்கான அடையாளமாக தமிழகம் வளர்ந்திருக்கிறது. அதுவும் ஒரு தரப்புக்கான வளர்ச்சி இல்லை; 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற பரந்துபட்ட வளர்ச்சி.
பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், உழவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று எல்லோரையும் 'Empower' செய்யும் Politicsயை நாங்கள் முன்னெடுத்து இருக்கிறோம். நான் மக்களை நம்புபவன். மக்களுக்கான எங்களின் பயணத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழகத்தில் நடக்க இருப்பது, ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான தேர்தல். நான் உறுதியாக சொல்கிறேன்.
தமிழகம் வெல்லும்
தமிழ்நாடு v/s என்டிஏ என்ற இந்த தேர்தலில் தமிழகம் தான் நிச்சயம் வெல்லும். எங்களைப் பொறுத்த வரைக்கும், சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, சகோதரத்துவம், மாநில சுயாட்சி உள்ளிட்ட கருத்தியல்கள் குறித்து இந்தியா முழுவதும் ஒரு பரந்துபட்ட பார்வை உருவாக வேண்டும் என்று நினைக்கிறோம்.
அதுதான், இந்தியாவிற்கு உண்மையான வளர்ச்சிப் பாதையை உருவாக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்தப் பாதையைக் காட்டுவதற்கான ஒளியாகதான், திராவிட மாடலை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். இந்தப் பணியிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
என் உயரம் தெரியும்!
'தேசிய அளவில் இண்டியா கூட்டணிக்கு தலைமை ஏற்பீர்களா' என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர், 'என் உயரம் எனக்குத் தெரியும்' என்று கூறினார். இது, 1990களில் கூட்டணி அரசு உருவானபோது, 'பிரதமர் பதவி ஏற்க தயாராக இருக்கிறீர்களா' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
ஏன் பாஸ், செல்போனின் கீழே கட்டை விரலும், மேலே மீதி நான்கு விரல்களும் வைத்துள்ளீர்களே. செலுபி எது அது செல்பியா? எடுக்க எந்த விரலை உபயோகிக்கப்படுத்துவீர்கள்? எது இது ஷூட்டிங்கா?
எட்டுக் கோடி மக்களை ஏமாற்ற வேண்டும் என்றால் பெண்களின் அக்கவுண்டில் ரூபாய் 5000 போட்டு ஆசையைத் தூண்ட வேண்டும் என்று செயல்படுவது நம்ம துருப்பிடித்த இரும்புக்கை கோப்பால்தானுங்களே. இருந்தாலும் உங்களின் புரிந்துணர்வுக் கூட்டணிக் கட்சியான பாஜக நவதுவாரங்களை மூடி மௌனமாக இருக்கும் வரையிலும் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஏறி அடிக்கலாம் பாஸ்.
ஆட்சி அதிகாரம் பொது மக்களுக்கு நல்லது செய்யவே - ஆனால் தீம்க்காவுக்கு மட்டும் அது கொள்ளையடிக்க வசதியாக இருக்க.
பொருளாதார ரீதியாக தமிழகம் வளர்ச்சியடைந்திருக்கிறது என பெருமையாக கூறிக் கொள்ளும் முதல்வர் அதற்கு காரணமாக துணை நின்ற மத்திய பாஜக அரசையும் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக அரசையும் மறந்தும் பொது வெளியில் குறிப்பிடுவதில்லை. ஏனென்றால் பொருளாதார வளர்ச்சி என்பது ஏதோ ஒரிரு வருடங்களிலோ அல்லது மத்திய அரசின் பங்களிப்பு இல்லாமலோ திடீரென்று அடைந்து விடக் கூடிய விஷயமல்ல இன்று தமிழகம் கண்டிருக்கின்ற வளர்ச்சி என்பது கடந்த ஒரு தசாப்தமாக நாட்டை ஆளும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும் தமிழகத்தை ஆண்ட அதிமுக அரசின் பங்களிப்பையும் யாரும் மறுக்க முடியாது.
அப்பப்பா இதுதாண்டா அண்டப்புளுகு ஆகாயபுளுகு என்பது தாங்கல இந்த ஆட்சியைப்பற்றின புகழிச்சிகள் அடுத்தவர்கள் அன்றோ இவரது ஆட்சியைப்பற்றி புகழ வேண்டும் தானே தனது ஆட்சியைப்பற்றி புகழ்ந்தால் யாரையா அதை கேட்பாரு. அடுத்தஆட்சி வந்ததும் தெரியும் எல்லா தில்லுமுல்லுகளும் வெளிவரும் ஒன்றா இரண்டா ஆயிரக்கணக்கில் உள்ளன
பாஜக நடத்தும் சதுரங்க வேட்டை
திமுக நடத்தும் கனிம வளங்கள் வேட்டை
இலவசமும் ,குடியும் குடுத்து தமிழக மக்களை நீங்கள் ஆடாத சதுரங்க வேட்டையா
உங்கள் தகப்பனார் கலைஞர் - ஊழலில் Phd வாங்கியாவர்.
ஆனால் கலைசர் காலத்திலும் கலைஞருக்கு பின் வந்த மத்திய அரசுகள் - பலவீனம் நிறைந்த ஊழல் கட்சிகளாக இருந்தன. அதனால் தான் கலைஞ்சர் சிறையில் போகாமல் தப்பினர்.
இப்போது நடப்பது மோதி ஆட்சி. இனி பார்த்துக்கொண்டே இருங்கள். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழல் குடும்பக்கட்சி கள் கூண்டோடு திஹார் செல்வார்கள்.

5 வருஷமா தமிழகத்திற்கு ஒண்ணுமே செய்யாமே இப்படி வாயால வடை சுடறீங்களே. நீங்க நடத்துறது என்ன வேட்டைங்க? தேர்தல் நேரத்துல ஐயாவுக்கு புதுசா புதுசா வார்த்தையெல்லாம் வருது.