Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 பா.ஜ.,வை ஒரு கை பார்க்க தயார்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

 பா.ஜ.,வை ஒரு கை பார்க்க தயார்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: ''தமிழகத்தில் பல முனை போட்டிகள் இருக்கலாம். ஆனால், அது பலம் பொருந்திய போட்டியாக இல்லை,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும், 11.19 சதவீதம் என்ற வளர்ச்சியை சாதிக்க முடிய வில்லை. ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும் சிறிதும் மதிப்பு தராத பா.ஜ., அரசு மத்தியில் உள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை, எந்த அளவிற்கு வஞ்சகத்துடன், ஓரவஞ்சனையுடன் அவர்கள் அணுகுகின்றனர் என்று, நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் செய்திருப்பது போன்ற திட்டங்களை, வேறு எந்த மாநிலத்திலாவது செய்து இருக்கின்றனரா?

தமிழகத்தில் எந்த குடும்பத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்களில் ஒருவராவது தி.மு.க., அரசின் திட்டங்களால் பயனடைந்து கொண்டிருப்பார். அதனால் தான், ஆட்சிக்கு ஆதரவான மனநிலையில் மக்கள் உள்ளனர்.
தமிழகத்தின் இந்த வளர்ச்சியும், தனித்துவமும், உண்மையான வளர்ச்சி அரசியல் என்றால் என்ன என்று, இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு காண்பிக்கும் செயல்பாடுகளும், பா.ஜ.,வை கடுமையாக எரிச்சல் அடைய வைக்கிறது.

அவர்களின் சதி அரசியல் வெளிப்பட்டு, அவமானப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கின்றனர். மற்ற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி ஆட்சிகளை கவிழ்த்து, தங்களின் அரசை கொண்டு வர பயன்படுத்திய வாஷிங் மெஷினை, பா.ஜ.,வினர் இங்கும் கொண்டு வந்து, கூட்டணி அமைத்து உள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி என்பது, முழுக்க முழுக்க ஊழல்வாதிகளை மிரட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணி. அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் பலர், 'ரெய்டு'களுக்கு ஆளாகினர். கூட்டணிக்காக அவர்களை இப்போது பாதுகாத்து கொண்டிருக்கின்றனர்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், முன்னாள் அமைச்சர்கள் மீது எப்.ஐ.ஆர்., கூட பதிவு செய்ய விடாமல், கவர்னர் வாயிலாக நீண்ட காலமாக நிறுத்தி வைத்து உள்ளனர். இந்த லட்சணத்தில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சி.பி.ஐ., வாயிலாக எங்களை மிரட்டலாமா என்று பார்க்கின்றனர்.

பா.ஜ., தன் படை பரிவாரத்தை அழைத்து வந்தாலும், அதை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகத் தான் இருக்கிறோம். மக்கள் பா.ஜ.,வை நம்ப வேண்டும் என்பதற்காக, பழனிசாமி போன்றவர்களை கிளை செயலர்களாக வைத்துக்கொண்டு உள்ளே வர நினைக்கின்றனர்.
தமிழகத்தில் நடக்க இருப்பது ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான தேர்தல். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் தமிழகத்திற்கு அடிக்கடி வர வேண்டும். கவர்னரையும் மாற்றக் கூடாது. அதுவே, மக்கள் மத்தியில் எங்களுக்கு பெரிய பலம்.
'இண்டி' கூட்டணி தலைவராக நான் வர வாய்ப்பிருக்கிறதா என்று கேட்கிறீர்கள். என் உயரம் எனக்கு தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement

பிப் 24, 2026 09:05 am

தி மு க அரசால் நாங்கள் எந்த பயனும் அடையவில்லை...

Reply Rate this
பிப் 24, 2026 08:48 am

ஸ்டாலின் தொடரட்டும் திகார் மற்றும் புழல் காத்துக் கொண்டு இருக்கிறது. தொடர்ந்து போராடி அங்கெல்லாம் செல்லலாம்

Reply Rate this
பிப் 24, 2026 08:25 am

முதல்வர் திட்டவட்டம் என்பதற்கு பதிலாக முதல்வர் காட்டம் என்று தலைப்பிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் அதிமுகவின் முன்னால் அமைச்சர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்படுகிறது திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்படுகிறது எனும்போது மத்திய பாஜக அரசு கட்சி பேதமின்றி, அரசியல் காரணங்களின்றி நடுநிலையோடுதானே தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. அதை ஏன் அரசியல் சார்புடையதாக பார்க்க வேண்டும்

Reply Rate this
பிப் 24, 2026 08:07 am

தமிழ்நாட்டுக்கு உங்களின் திராவிட மாடல் அரசு இந்த ஐந்து வருடங்களில் என்னென்ன சாதனைகள் செய்திருக்கிறது என்பதை சொல்லாமல் செய்திருந்தால் தானே சொல்வதற்கு இன்னமும் பாஜக, ஜனநாயகம், பாசிசம், பாயாசம் என்று பழைய பல்லவியே பாடினால் அதை முன்புபோல தமிழக மக்கள் நம்ப தயாரில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதிமுக அமைச்சர்கள் மீது FIR போடவில்லை என கவர்னரை குற்றம் சாட்டும் நீங்கள் உயர்நீதிமன்றம் அமைச்சர் K.N நேரு மீது FIR போட சொல்லியும் உங்களின் காவல்துறையை வைத்து எப்.ஐ.ஆர். போடாமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் ஒரு வாரத்தில் அவர்மீது கண்டிப்பாக எப்.ஐ.ஆர் போட வேண்டிய சூழ்நிலை உருவாகும் அப்படி போட்டு விட்டால் அவர் அடுத்த 24 மணி நேரத்தில் டெல்லியில் அப்துல்கலாம் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருப்பார். பாஜகவை ஒரு கை பார்க்க தயாராக இருக்கும் நீங்கள் Building Strong Basement Weak அப்போது உங்கள் வீரத்தை காட்டுங்கள் அதுவரை கொஞ்சம் பொறுங்கள் மிஷின் நிக்கட்டும்

Reply Rate this
பிப் 24, 2026 08:01 am

ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்

Reply Rate this
ஸ்டாலின் தோற்கட்டும், தமிழகம் பிழைக்கட்டும்.
பிப் 24, 2026 09:08 am
Rate this
பிப் 24, 2026 07:58 am

இதுதான் சொந்த காசுலே சூன்யம் வச்சிகிறது என்று சொல்லுவார்கள். உங்களால ஒரு மண்ணும் பண்ண முடியாது இதுல வீர வசனம். இறுதியில் நீங்க தான் மாட்டிக்க போறீங்க

Reply Rate this
பிப் 24, 2026 07:51 am

முதலில் அந்த கையை பாருங்க, அது விசில் அடிக்கிறது.

Reply Rate this
பிப் 24, 2026 07:47 am

அதே போல் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையில் உங்கள் ஆட்சியால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறதே அது உங்களுக்கு எதிராக திரும்பும்

Reply Rate this
பிப் 24, 2026 07:33 am

ஸ்டாலின் தொடரட்டும் ...தமிழ் நாடு வெல்லட்டும்

Reply Rate this
உமக்கு தினமும் இருநூறு வரட்டும்
பிப் 24, 2026 08:15 am
Rate this
பிப் 24, 2026 07:03 am

கையே உங்களுடன் இல்லை. இருக்கும் சொந்த கையில் ஜோசியமா பார்க்க போகிறீர்?

Reply Rate this