Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்த ராமதாஸ், அன்புமணி

 நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்த ராமதாஸ், அன்புமணி

செங்கல்பட்டு: திருமண விழாவில் பங்கேற்ற ராமதாஸ், அன்புமணி இருவரும், நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தனர்.

செங்கல்பட்டு அடுத்த, பழவேலி கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உறவினர் இல்ல திருமண விழா, நேற்று நடந்தது. இதில், ராமதாஸ் பங்கேற்று, திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமணம் முடிந்து, ராமதாஸ் புறப்பட்டு சென்ற பின், பா.ம.க., தலைவர் அன்புமணி, அவரது மனைவி சவுமியா ஆகியோர் வந்தனர். திருமண விழாவில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தி விட்டுச் சென்றனர்.

பா.ம.க.,வில், தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், நேற்று நடந்த திருமண விழாவிலும் இருவரும் சந்திக்கவில்லை.

முன்னதாக, திருமண விழாவுக்கு வந்த ராமதாஸ் அளித்த பேட்டி:

பா.ம.க.,வின் மாம்பழம் சின்னம் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நிச்சயமாக, எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும். மாம்பழம் சின்னம் எங்களுக்கு சொந்தமாகும்.

வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக பேச்சு நடைபெறுகிறது. நாங்கள் யாருடன் கூட்டணி அமைப்போம் என்பது குறித்து, விரைவில் நல்ல செய்தி வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement